கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால், சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் இன்று முதல் 4 நாட்களும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 3 நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுத்துவிட்டால் ஊரடங்கு முடியும்போது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். எனவே தமிழகத்திலிருந்து கொரோனாவை விரட்டுவதில் நமக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால், இனி புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளும் ஒன்றிணைந்து, இரவும் பகலுமாக கொரோனா ஒழிப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் இந்தியாவில் கொரோனா பரவும் வேகமும் கணிசமாக குறைந்து வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் எனும் எமன், இன்று அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. உலக அளவில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சில ஆயிரம் பேர் மடிந்து வருகிறார்கள். ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ள நிலையில், பல நாடுகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தொற்றின் கடும் பாதிப்பை, ஐரோப்பிய நாடுகள் பலவும் சந்தித்துவரும் நிலையில், தற்போது லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் நிலைமை கைமீறிச் சென்றுள்ள நிலையில், இந்தியா உட்பட குறிப்பிட்ட சில நாடுகள் கடும் நடவடிக்கை எடுத்து , கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே பிரதமர் மோடி அதிதீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறார்.


ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக பைக் மற்றும் கார்களில் வெளியே சுற்றித்தான் வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று அதிகளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால், சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் இன்று முதல் 4 நாட்களும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 3 நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுத்துவிட்டால் ஊரடங்கு முடியும்போது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். எனவே தமிழகத்திலிருந்து கொரோனாவை விரட்டுவதில் நமக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால், இனி புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான்.
எனவே அனைவரும் ஊரடங்கை மதித்து, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்; தேவையின்றி வெளியில் வரக்கூடாது. கொரோனாவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சமூகப் பொறுப்பின்றி, ஊரடங்கை மீறி மக்கள் வெளியே வந்தால் அது கொரோனா ஒழிப்பு என்ற நமது லட்சியத்தை பாழாக்கி விடும். தமிழக மக்கள் இதுவரை வழங்கிய ஒத்துழைப்பை காட்டிலும் வரும் காலங்களில் கூடுதல் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கை சில நாட்கள் கடைபிடிக்க வேண்டும். மக்கள் இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்பட்டால் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் நாம் கொரோனாவை இந்திய தேசத்தை விட்டே விரட்ட முடியும். இந்த உறுதியை ஒவ்வொருவரும் ஏற்போம். நமது வெற்றியை உலகம் கண்டு வியக்கட்டும்” என அறிக்கையில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
