தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ் சென்றடைந்தது. 185 பக்கங்களை கொண்ட நோட்டீஸில் டிடிவி. தினகரனுடன் இருக்கும் புகைப்படங்களும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. நோட்டீஸ் கையில் கிடைத்த 7 நாட்களுக்குள் எம்எல்ஏக்கள் 3 பேரும் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க உள்ளனர். 

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்னசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். தேர்தலின்போது, டி.டி.வி.தினகரன் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இவர்கள் அமமுகவில் இணைந்து, அக்கட்சியில் பொறுப்புகள் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்குமாறு, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இது விவகாரம் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம், கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபால் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் 3 எம்.எல்.ஏ.க்கள் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் சபாசாயகருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

இந்நிலையில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ் சென்றடைந்தது. 185 பக்கங்களை கொண்ட நோட்டீஸில் டிடிவி. தினகரனுடன் இருக்கும் புகைப்படங்களும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. நோட்டீஸ் கையில் கிடைத்த 7 நாட்களுக்குள் எம்எல்ஏக்கள் 3 பேரும் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க உள்ளனர்.