திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு குறித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு அறியாமையை வெளிப்படுத்துவதாகவும், நடிகர் சிவாஜி, கமல் ஹாசனைவிட ஓ.பி.எஸ். சிறப்பாக நடிப்பதாகவும் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

அதிமுக அணிகளாக பிளவுபட்டிருக்கும் இந்த சமயத்தில், இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் ஒரே சமயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளையும் விசமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

குளம், ஏரிகளில் தூர்வாருவது தொடர்பாக தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் இடையேயான பரஸ்பர குற்றச்சாடடும், கருத்து மோதல்களும் தீவிர மடைந்து வருகின்றன. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, நீர்நிலைகளை மேம்படுத்த அரசு குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனது. இதனால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் குளங்களை தூர்வாருவதாக கூறினார்.

விவசாயிகளுக்கு பயன்தரக்கூடிய நீர்நிலைகளைத் தூர்வாராமல் சைதாப்பேட்டை கோயில் குளத்தை தூர்வைரியது ஏன் எனவும், புண்ணியம் தேடவே ஸ்டாலின் கோயில் குளங்களில் தூர்வாரும் பணியை மேற்கொள்வதாகக் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பிளவுபட்டிருப்பதாக நினைத்து மக்களை தன் பக்கம் ஈர்க்க மு.க.ஸ்டாலின் நாடகமாடுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் இருந்தபோது, காவிரி முல்லைப்பெரியாறு ஆகியவற்றில் தனது கடமையை செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். விமர்சனம் தொடர்பாக பதில் அளித்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமியின் அறியாமையை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தின் விமர்சனத்துக்கு பதில் அளித்த இளங்கோவன், நடிகர் சிவாஜி, கமல்ஹாசன் ஆகியோரைவிட ஓ.பி.எஸ். சிறப்பாக நடிப்பதாக டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.