நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டங்கள், கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருவள்ளூர் கிழக்கு - திருவள்ளூர் மத்திய  -  திருவள்ளூர் மேற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. திருவள்ளூர் மத்திய மாவட்டம்

* ஆவடி
*  பூவிருந்தவல்லி (தனி)

2. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

*  கும்முடிப்பூண்டி
*  பொன்னேரி (தனி)

3. திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

* திருத்தணி
*  திருவள்ளூர் 

திருவள்ளூர் மத்திய மாவட்டம்

பொறுப்பாளர் - ஆவடி சா.மு.நாசர்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

பொறுப்பாளர் -  டி.ஜெ.கோவிந்தராஜன்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

 பொறுப்பாளர்  -  எம்.பூபதி ஆகியோர் நியமிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.