இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 85 பேரில் மேலும் ஏழு பேர் குணமடைந்துள்ளனர், இந்நிலையில்  அவர்கள் அனைவரும்  மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர் . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  இதுவரை சீனாவில் 3 ஆயிரத்திற்கும்  அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .  உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  4000 ஆக உயர்ந்துள்ளது. 

சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  கேரளா ,  மராட்டியம் ,  கர்நாடகா , உத்தரபிரதேசம் ,  ராஜஸ்தான் ,  டெல்லி ,  உள்ளிட்ட 13 மாநிலங்களில் கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது . இந்தியாவில் இதுவரை 87 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .  இதில் இருவர் உயிரிழந்துள்ளனர் . கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவரும் டெல்லியை சேர்ந்த 69 வயது  பெண்மணியும்  வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர். 

 

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்துள்ளனர் . உத்திரப்பிரதேச மாநிலத்தில் 5 பேரும் ,  டெல்லி ராஜஸ்தானில் இருந்து தலா ஒருவரும்   குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு திரும்பியுள்ளனர் .  இதன்மூலம்  கொரோனா பாதித்து பின்னர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது .  கேரள மாநிலத்தில் ஏற்கனவே மூன்று பேர் குணமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது .