காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு பாஜகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து திருவாடனை தொகுதி எம்எல்ஏவும், புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ், பாஜகவில் இணை விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

பாஜக தமிழகத்தில் சமீப காலமாக வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கங்கனம்கட்டிக்கொண்டிருக்கிறது பாஜக.கடந்த 5ஆண்டுகளில் பாஜக வளர்ச்சி என்பது குறிப்பிட்ட அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. திமுக அதிமுக என பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜக நோக்கி தொண்டர்கள் வந்து கொண்டிருப்பதே பாஜக வளர்ச்சிக்கு அச்சாரமாக அமைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் பாஜக தமிழகத்தல் விரைவில் ஆட்சியை பிடித்தே தீரும் என்கிறார்கள் பாஜக மூத்த நிர்வாகிகள்.

 மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டினால், தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.அதிமுகவில் சசிகலா தரப்பினருக்கு முதலில் ஆதரவு தெரிவித்து வந்த எம்எல்ஏ கருணாஸ், தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது முழு ஆதரவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.