ஹரியானா சட்டசபை தேர்தலில் டிக்டாக் நடிகைக்கு பாஜக சீட்டு வழங்கியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

90 உறுப்பினர்கள் கொண்ட அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது அதற்கான  78 வேட்பாளர்களை அடங்கிய பெயர் பட்டியலை பாஜக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் தற்போது பாஜக எம்எல்ஏக்களாக உள்ள 38 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மக்கள் மத்தியில் பிரபலல் அடைந்தவர்களுக்கு சீட்டு வழங்கி தேரதலில் வாக்குகளை அள்ளும் புதிய டெக்னிக்கை பஜக கையாண்டு வரும் நிலையில், பாஜகவில் புதியாத கட்சியில் இணைந்துள்ள விளையாட்டு  வீரர்களுக்கு தேர்தலில் சீட்டு வழங்கி ஆச்சரியத்தை கிளிப்பியுள்ளது பாஜக. அதில் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், இந்திய  ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சந்திப் சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், உள்ளிட்டோரையும் பாஜக  களம் இறக்குகிறது.

இந்நிலையில் தொலைக்காட்சி பிரபலமும், டிட்டாக் பிரபலமுமான சோனாலி போகத்திற்கு அரியான தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கி உள்ளது. இது பாஜகவின் மீது அதிக அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்  சோனாலி போகத் இவர் டிக்டாக் செயலி மூலம் அரியானா மாநிலத்தில் பிரபலமானார் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே அங்கு உண்டு.  அதுமட்டுமில்லாமல் டிவி சீரியல்களில் நடித்து  பிரபலமானவர் என்பதால்  அதிக அளவில் வாக்கு பெற்று வெற்றிபெறுவார் என்ற நோக்கத்தில் சீட் வழங்கியுள்ளது பாஜக. சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் மற்றும் பாஜக தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது,  அதில் ஹரியானா மாநிலம் ஆதம்பூர் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏ வேட்பாளராக சோனாலி போகத் களம் இறக்கப்படுவார் என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் சோனாலிக்கு சமூக வலைத்தளத்தில்  இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சோனாலி நிச்சயம் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆக வாழ்த்துகள் என்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.