ரஜினி அரசியலுக்கு வந்தால் மூன்று திட்டங்களை கடைபிடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

அவரறிவித்துள்ள முதல் திட்டத்தில், ’தேர்தல் வரைதான் கட்சிப்பதவி. தேர்தல் முடிந்த பிறகு பதவிகள் நீக்கப்படும். திருமணத்தின் போது சமையல்காரர்கள், சமையல்காரர்கள் என அனைவரும் இருப்பார்கள். திருமணம் முடிந்த பிறகு அவர்களை அப்படியே வைத்துக் கொள்வோமே? அப்படி தேர்தல் முடிந்த பிறகு முக்கிய பதவிகளை மட்டும் கொடுத்து விட்டு மீதமுள்ள பதவிகளை எடுத்து விடுவோம்.  மாவட்ட செயலாளர்கள் பதவிகளை மட்டும் வைத்துக் கொள்வோம். 

இரண்டாவது திட்டம்,  50 வயதுக்கு  கீழ் உள்ள இளைஞர்களுக்கு 60-65 சதவிகிதம் பேருக்கு சீட் கொடுப்பேன். வேறு கட்சியிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அந்தமாதிரி வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் வரலாம். ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் வரலாம். அவர்கள் ஏன் அரசியலுக்கு வரலாம் என மக்கள் ஏங்குவார்கள். அவர்களை நானே வீட்டுக்கு போய் கூப்பிட்டு அவர்களை அரசியலுக்கு அழைத்து வருவேன். இப்படி பட்டவர்கள் 40 சதவிகிதம் பேருக்கு சீட் கொடுப்பேன். 

மூன்றாவது திட்டம், தேசிய கட்சிகளை தவிர எல்லா மாநிலக் கட்சிகளிலும் ஆட்சிக்கும், கட்சிக்கும் அவர்தான் தலைவர். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்தான் எல்லாம். அவர்களை எதிர்த்து கேள்விகேட்பவர்களை தூக்கி எரிந்து விடுவார்கள். ஆகையால், கட்சிக்கு ஒரு தலைமை. ஆட்சிக்கு ஒரு தலைமை கொண்டு வருவேன். அது ஒரு சி.இ.ஓ பதவி போல இருக்க வேண்டும்.

நான் முதல்வராவதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. என்னால் முதல்வராகவும் வர விருப்பமில்லை.  நல்ல இளைஞனாக, படித்தவனாக, தன்மானம் உள்ளவனாக உட்கார வைப்போம். அவர்கள் தறு செய்தால் தூக்கி எரிவோம்’’எனத் தெரிவித்துள்ளார்.