இறைமாட்சி அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள திருக்குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் பிரதமருக்கு இருப்பதாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை கூறியுள்ளார்.

டெல்லியில் முரளிதரராவ் தலைமையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்த விழாவில் பேசிய அவர்,’’இறைமாட்சி அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு’’ என்கிற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். குறளை படித்து முடித்த அண்ணாமலை குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இருக்கிறது. 

கட்சியில் ஒரு தொண்டனாக சேர்ந்திருக்கும் நான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை. கட்சி சார்பில் எடுக்கும் எவ்வகையான முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன். கட்சியை வலுப்படுத்த என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன்’’ என்று கூறிய அவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
கரூர் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் திமுகவை சேர்ந்த, செந்தில்பாலாஜி மற்றும் காங்கிரஸ் ஜோதிமணி குறித்து குறைகளை குறிப்பாக மணல் கடத்தல் உள்ளிட்ட புகார்களை மக்கள் மத்தியில் எடுத்து சென்று வருகிற சட்டமன்ற தேர்தலில் கரூர் பகுதியை பாஜகவின் செல்வாக்கு மிக்க பகுதியாக மாற்ற அறிவுறுத்த பட்டுள்ளதாம்.

பாஜக எப்போதும் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்களுக்கு கட்சியில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும், கிரண் பேடி உள்ளிட்டோர் அதில் அடங்குவர் அந்த வகையில் அண்ணாமலைக்கு கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்க படும் என்று கூறப்படுகிறது,இதுநாள் வரை மோடியை அடிப்படை ஆதாரமின்றி விமர்சனம் செய்துவந்த ஜோதிமணி போன்றோருக்கு அண்ணாமலை பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.

கொங்கு மண்டலத்தை குறிவைத்து தொடர்ந்து பாஜக காய்களை நகர்த்தி வருவது சட்டமன்ற தேர்தலில் அக் கட்சிக்கு வலுசேர்க்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.