லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறாமல் வெறும் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

 

வேலூர் மக்களவை தேர்தலில்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஏ.சி.சண்முகத்தை 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கதிர் ஆனந்த் 4 லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகள் பெற்றார். அதேவேளை அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4 லட்சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகளை பெற்று பெறும் போட்டியாளராக மாறினார். லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காலம் முடிந்து இப்போது ஆயிரக்க்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி பெற்று இருக்கிறது திமுக. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுகவை சேர்ந்த வைகைசெல்வன், ‘’வேலூர் தேர்தல் - உண்மையில் வெற்றி பெற்றது அதிமுக கூட்டணி தான். 2 மாதங்களுக்கு முன்பு 25 சதவீதமாக இருந்த வாக்கு வாங்கி இன்று 47 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேலூரில் திமுக மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கில் வாக்குகள் வித்தியாசத்தில் இருந்த திமுக சில ஆயுரக்கணக்கில் தனது விளிம்பு நிலையை அடைந்து விட்டது.

இனி தேர்தலில் தினுக மண்ணைக்கவ்வும். அதிமுக வெற்றிச் சரித்திரம் படைக்கும் என அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.