எலியும் பூனையுமாக சண்டை போட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் சில தினங்களுக்கு முன்பு தலைமை அலுவலகத்தில் ஒன்றாக இணைந்தது. 

அப்போது, சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் எம்.பி. தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏக்கள் 19 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். 

மேலும், எடப்பாடியை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என 19 எம்.எல்.ஏக்களும் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதை கொறடாவிடம் தெரிவிக்கவில்லை. 

இதைதொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக அடுத்ததாக என்ன திட்டம் தீட்டலாம் என புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கி யோசித்து வருகின்றனர். 

இதனிடையே கட்சி பொறுப்பில் இருந்து எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் ஒவ்வொருவரையாக டிடிவி நீக்குவதாக அறிவித்தார். இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பில் இருந்த அறந்தாங்கி எம்.எல்.ஏ  ரத்னசபாபதி டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார். 

மேலும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் சபாநாயகர் முதலமைச்சராக வந்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்து வந்தனர். ஆனால் இன்று காலையில் இருந்து சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடியும், அமைச்சர்களும் தற்போது வேறு ஒரு முடிவை கையில் எடுத்துள்ளனர். 

அரசு எதிராக போர்கொடி தூக்கினால் பதவியை பிடுங்க வேண்டும், என்ற நோக்கில் கொறடாவை வைத்து காய் நகர்த்துகிறார். 

அதாவது, அரசுக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்தது தவறு எனவும், 19 எம்.எல்.ஏக்களின் பதவியையும் பறிக்க வேண்டும் எனவும் கொறடா சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். 

இதனால் அடுத்தடுத்து மெதுவாக காய் நகர்த்தி வந்த டிடிவி தினகரன், தற்போது ஆட்டம் கண்டுள்ளார். சபாநாயகரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என கூறிவர்களுக்கு அவரை வைத்தே ஆப்பு வைக்கிறார் எடப்பாடி...