தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு கூடுதலாக 5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்கள்.

Thoothukudi firing.. CM Stalin ordered to pay 5 lakh more to the families of 13 people who died

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தாருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு மேலும் கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை  நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. இபிஎஸ் மீது வழக்குப்பதிவா? அமைச்சர் ரகுபதி சொன்ன பரபரப்பு தகவல்.!

Thoothukudi firing.. CM Stalin ordered to pay 5 lakh more to the families of 13 people who died

அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 19-10-2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்கள்.

இதையும் படிங்க;-  இரண்டு அறிக்கைகள் குறித்து EPS வாயை திறந்து பேசமால் இருப்பது வேடிக்கையாக இருக்கு.. கொதிக்கும் கோவை செல்வராஜ்

Thoothukudi firing.. CM Stalin ordered to pay 5 lakh more to the families of 13 people who died

மேற்படி அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 இலட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட  முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். 

இதையும் படிங்க;-  விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பை நீட்டிக்க வேண்டும்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios