அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன்  அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலையடுத்து அவ் டி.டி.வி.தினகரனை மரியாதைக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக மதுரை மக்களை தொகுதி வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மகேந்திரன் ஆகியோர் தங்கத்மிழ் செல்வன் தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவ்லகள் வெளியானது 

இதையடுத்து தேனி மாவட்ட அமமுகவுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து தேனி மாவட்ட ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகளுடன் அமமுக  இரண்டாம் கட்ட தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இது குறிந்த தகவல்கள்  வெளியானதையடுத்துதான்  தினகரனை விமர்சித்து அவரது உதவியாளரிடம் தங்கதமிழ்செல்வன் கடுமையாக பேசியுள்ளார்.
இந்த ஆடியோ மூலம் டிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் இடையிலான மோதல் அம்பலமாகியுள்ளது.