இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் அதிமுக வெல்லப்போகும் தொகுதிகளை உளவுத்துறை கணித்து சொல்லி இருக்கிறது. 

18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று உள்ள நிலையில் இதில் 8 தொகுதிகளில் வென்றால் அதிமுக ஆட்சி தப்பிக்கும். இந்த 18 தொகுதிகளில் 6 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என அந்த தொகுதிகளை பட்டியலிட்டு உள்ளது உலவுத்துறை. அதன்படி மானாமதுரை, பரமக்குடி, பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர், குடியாத்தம், சாத்தூர் ஆகிய ஆறு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் அடுத்து நடக்க உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து ஆட்சியை தக்க வைக்க மொத்தம் 10 தொகுதிகளை அதிமுக கைப்பற்ற வேண்டிய கட்டாய நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

எனவே இந்த நான்லு தொகுதிகளிலும் கட்டாய வெற்றி பெற என்ன விலை கொடுத்தேனும் காரியம் சாதிக்க வேண்டும் என அதிமுக  தலைமை திட்டமிட்டுள்ளது. ஆகையால் பலம் நிறைந்த, வலுவான வேட்பாளர்களை அந்தத் தொகுதிகளில் நிறுத்த ஆள் தேடி வருகிறது அதிமுக.