A.ராசா அவர்களே நாவடகத்துடன் இருங்கள்!இனியும் ஹிந்து நம்பிக்கைகளை அவமதித்தால் இது தான் நடக்கும்! BJP எச்சரிக்கை

நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? சொல்லுங்கள் என்கிறார் ஆ.ராசா. தொடர்ந்து தவறான புத்தகங்களை படித்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைத்து தாக்கி, கோவில்களை சிதைத்து, கலாச்சாரத்தை சீர்குலைத்து ஓட்டுக்காக, பணத்துக்காக, அதிகாரத்திற்காக ஹிந்து மதம் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சொல்லி வரும் ஆ.ராசா அவர்களே நாவடகத்துடன் இருங்கள். 

This is what will happen if Hindu beliefs continue to be insulted.. BJP warns A. Raja

ஹிந்து மதம் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சொல்லி வரும் ஆ.ராஜா அவர்களே நாவடகத்துடன் இருங்கள் என பாஜக எச்சரித்துள்ளது.

சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது ஆ.ராசா பேசுகையில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான், நீ பஞ்சமன்தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன் தான். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையானது. இந்து மதம் குறித்து பேசிய ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக கூறி வருகின்றனர். அவருக்கு எதிராக இந்த அமைப்பினர் போராட்டம் மற்றும் பாஜகவில் பல்வேறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதையும் படிங்க;- ஹிந்துக்கள் எல்லாம் விபச்சாரியின் மகன்கள்.. சர்ச்சையில் சிக்கிய ஆ.ராசா மீது வழக்கு? அடுத்தடுத்து அதிர்ச்சி
This is what will happen if Hindu beliefs continue to be insulted.. BJP warns A. Raja

இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- திருப்பதி நாராயணன் என்ற ஒரு ஆள் ..... மதிக்கிறேன்.... ஒரு நல்ல சட்ட ரீதியான வாதத்தை முன் வைத்திருக்கிறார். ஹிந்து மதத்தில் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் இப்போது அந்த ஹிந்து மதம் இல்லை. அம்பேத்கர் ஹிந்து சட்டம் கொண்டு வந்த பிறகு, ராஜா சொல்வது பொருந்தாது" என்று நான் கூறியதாக ஆ.ராஜா உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார். ஹிந்து மதத்தில் அவதூறாக சொன்னதெல்லாம் உண்மை தான் என்று நான் ஒரு காலத்திலும் கூறியதில்லை. ஏனெனில், ஹிந்து மதத்தில் எங்கேயும், எப்போதும் இழிவான கருத்துக்கள் சொல்லப்பட்டதில்லை.  

This is what will happen if Hindu beliefs continue to be insulted.. BJP warns A. Raja

ஈ. வெ.ராமசாமி சொன்னதை தான் கூறினேன், என்று ஆ.ராஜா கூறுகிறார். ஈ.வெ.ரா கூறியதும் தவறு தான். ஒரு பொய்யை நூறு முறை சொன்னால் அது உண்மையாகி விடும் என்பது போல், ஒரு பொய்யை நூறாண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆ.ராஜா, தி கவினர்  மற்றும் திருமாவளவன் போன்றவர்கள் அனைவரும் ஆங்கிலேயன் சர்.வில்லியம் ஜோன்ஸ் எழுதிய புத்தகம் அல்லது அதையொட்டி பின்னர் எழுதப்பட்ட புத்தகங்களை தொடர்ந்து மேற்கோள்காட்டியே மனுஸ்ம்ரிதி குறித்து பேசி வருகிறார்கள். இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயே ஏகாதிபத்திய அடிமைகளின் அறைகூவலே ஹிந்து மதம் மற்றும் சனாதனம் குறித்த இவர்களின் எதிர்மறையான விமர்சனங்கள். 

This is what will happen if Hindu beliefs continue to be insulted.. BJP warns A. Raja

நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? சொல்லுங்கள் என்கிறார் ஆ.ராசா. தொடர்ந்து தவறான புத்தகங்களை படித்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைத்து தாக்கி, கோவில்களை சிதைத்து, கலாச்சாரத்தை சீர்குலைத்து ஓட்டுக்காக, பணத்துக்காக, அதிகாரத்திற்காக ஹிந்து மதம் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சொல்லி வரும் ஆ.ராசா அவர்களே நாவடகத்துடன் இருங்கள். இல்லையேல் மக்கள் உங்களை புறந்தள்ளுவார்கள். அதனால் தான் மன்னிப்பு கேட்க சொல்கிறோம்.இதுநாள் வரை மக்கள் உங்களை கண்டு அஞ்சி கொண்டிருந்தார்கள். இனியும் ஹிந்து நம்பிக்கைகளை அவமதித்தால் உங்களை எதிர்த்து மக்கள் கொதித்தெழுவார்கள் என நாராயணன் திருப்பதி ஆவேசமாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- ஆ.ராசாவை கொச்சைப்படுத்தினால்... சென்னையில் மனுதர்மம் எரிக்கப்படும்.. பகிரங்கமாக அறிவித்த பெரியார் திக.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios