ஆ.ராசாவை கொச்சைப்படுத்தினால்... சென்னையில் மனுதர்மம் எரிக்கப்படும்.. பகிரங்கமாக அறிவித்த பெரியார் திக.
மனுதர்மத்தை திரும்பப் பெறாமல் ஆ.ராசாவை தொடர்ந்து கொச்சைப்படுத்தினால் சென்னையில் மனுதர்மம் எரிக்கப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனுதர்மத்தை திரும்பப் பெறாமல் ஆ.ராசாவை தொடர்ந்து கொச்சைப்படுத்தினால் சென்னையில் மனுதர்மம் எரிக்கப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனுதர்மத்தை மேற்கோள்காட்டி ராசா பேசியதற்கு எதிராக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் திராவிடர் கழகம் இவ்வாறு எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்து மதம் எப்படி சமூகத்தில் வர்ணபேதம் கற்பிக்கறது, சமீகத்தில் ஏற்றத் தாழ்வை, இழிவு போதிக்கிறது என்பதை விளக்கி பேசினார். அதில் நீ இந்து என்றால் நீ சூத்திரன் தான், நீ இந்து என்றால் தீண்டத்தகாதவன் தான், நீ இந்து என்றால் பஞ்சமன் தான், சூத்திரன் என்றால் வேசியின் பிள்ளை என்று பொருள், அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் வேசியின் பிள்ளைகளாக இருக்க விரும்புகிறீர்கள் என பேசினார்.
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் பற்றிய கேள்வி... அமித்ஷாவை சந்தித்த பின் சைலண்ட் மோடுக்கு போன இபிஎஸ்? நடந்தது என்ன?
ஆனால் ராஜா, இந்துக்களை வேசியின் பிள்ளைகள் என கூறிவிட்டார் என பாஜகவினர் அதை பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்துக்களை இழிவுபடுத்திய ராசாவை திமுகவில் இருந்து நீக்க வேண்டும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அவர் மீது காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதர்ம நூலை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் தலைமையில் திராவிடக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படியுங்கள்: சாதிய தீண்டாமை: பாஞ்சாகுளம் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி குமார் கோயமுத்தூரில் கைது!!
அதன்பின்னர் செய்தியாளர் சந்தித்த குமரன் கூறியதாவது, மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மனு அளிக்கப்பட்டு வருகிறது, காலம் காலமாக உழைக்கும் மக்களை பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்து மனுதர்மம் இழவு செய்கிறது, இதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும், ராசா கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்து மதத்திலுள்ள மனுதர்மம் குறித்து பேசியதை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் காரர்கள் திரித்துக் கூறி வருகின்றனர். எப்படியெல்லாம் திரிபுவாதம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருகின்றனர்.
ஆ.ராசா பேசியது பெரும்பான்மை மக்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்பதற்காக பேசவில்லை, மனுதர்மத்தில்தான் விபச்சாரியின் மகன் என்றெல்லாம் எட்டாவது அத்தியாயத்தில் 415 வது சுலோகத்தில் உள்ளதைதான் அவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார், ராசா பேசியதில் எந்தத் தவறும் இல்லை, மனுதர்மத்தை வைத்துக்கொண்டு பாஜகவினர் ஆர்எஸ்எஸ் வாதிகள் கூப்பாடு போடுகிறார்கள், அந்த மனுதர்மத்தை தடை செய்ய வேண்டும், புதுச்சேரியில் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த நூலை திரும்பப் பெறாவிட்டால், ஆ ராசாவை கொச்சைப் படுத்தினால், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனுதர்ம எரிப்பு போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் எச்சரித்தார்.