Asianet News TamilAsianet News Tamil

இது அநியாயம், அக்கிரமம்.. கடந்த 6 மாதங்களில் 165 ருபாய் விலை உயர்வு.. கொதிக்கும் பாமக ராமதாசு.

அதிலிருந்து மூன்று மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின்(14.2கிலோ) விலை கடந்த மாதம் 25 ரூபாய் அதிகரித்து, 850.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

This is unjust and wicked .. 165 rupees price increase in the last 6 months .. Boiling Bamaka Ramadasu.
Author
Chennai, First Published Aug 17, 2021, 11:41 AM IST

சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டது மாபெரும் தவறு என்றும்,  இதை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 610 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 710 ரூபாய்க்கு விற்பனையானது. இவ்வாறு படிப்படியாக உயர்ந்த சிலிண்டர் விலை மார்ச் மாத தொடக்கத்தில் 835 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து, சிலிண்டர் விலை 835லிருந்து 10 ரூபாய் குறைக்கப்பட்டு, 825 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்டு வந்தது. 

This is unjust and wicked .. 165 rupees price increase in the last 6 months .. Boiling Bamaka Ramadasu.

அதிலிருந்து மூன்று மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின்(14.2கிலோ) விலை கடந்த மாதம் 25 ரூபாய் அதிகரித்து, 850.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது இன்று மேலும் 25 ரூபாய் அதிகரித்து, 875 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாசு கருத்து பவிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது: வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை 850 ரூபாயிலிருந்து ரூ.875 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கக் கூடியதாகும். கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து  ரூ.165, அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது. 

This is unjust and wicked .. 165 rupees price increase in the last 6 months .. Boiling Bamaka Ramadasu.

சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46% என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்; தமிழக அரசும் அதன் பங்குக்கு ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios