விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இன்று மாலை இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை இதுதான் என ஒரு தகவல் கசிந்துள்ளது.

 

கல்லூரியில் பேராசியராக பணி புரிபவர் விஜய். இவரது குடிப்பழக்கத்தால் அந்த வேலையில் இருந்து சிறுவர் சீர்திருந்த பள்ளியில் ஆசிரியராக மாற்றப்படுகிறார். அங்கு மாணவர்களிடையே நடைபெறும் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் தெரிய வர அதை எப்படி தடுக்கிறார்? இதற்கு எப்படி தீர்வு காண்கிறார்? என்பது தான் இப்படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் முதல் போஸ்டரில் போதையில் மயங்கித் தவிக்கும் வகையில் ஷேக் போட்டோவை வெளியிட்டிருந்தனர். 

இதுதான் கதை என்பதை உறுதி செய்யும் வகையில் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் போஸ்டரில் விஜய் கையில் மது பாட்டில் வைத்து கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. விஜய்சேதுபதி சிகரெட் குடிக்கும் புகைப்படங்களும் வெளியாகி இதுதான் கதை என்பதை உறுதி செய்கின்றன.