திமுக தலைவர் கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிரார்.   கருணாநிதி பற்றிய பல்வேறு சிறப்பு நிகழ்வுகள்  முதல் அவரை பற்றிய நகில்வான  சம்பவனகள், அவருடன்  பகிர்ந்ம்துகொண்ட மறக்க  முடியாத நினைவலைகள் என  பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்

கருணாநிதி என்றாலே, மஞ்சள் துண்டுகருப்பு கண்ணாடி, தெளிந்த பேச்சு இவைகள்தான் திமுக தலைவர் கலைஞரின் அடையாளம்.

தனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்கையில் வெற்றி நடைப்போட்டு பயணித்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவருடைய  தனிப்பட்ட அடையாளமாக மாறி போனது தான் அவர் அணியும் கருப்பு கண்ணாடி...

1971 ஆம் ஆண்டிலிருந்து தான் இவர் கருப்பு கண்ணாடி அணிய  ஆரம்பித்தார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையான ஜான் ஹிப்கின்ஸ் என்ற மருத்துவமனையில் கலைஞருக்கு கண் பரிசோதனை செய்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவரை கண்ணாடி அணிய செய்தனர்.

அப்போது அணிய ஆரம்பித்த அந்த கருப்பு கண்ணாடியை 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றி விட்டார்.

கருப்பு கண்ணாடி கூடுதலான எடை கொண்டதால் அவரது கண்ணில் அழுத்தம் உண்டு செய்து வலியை ஏற்படுத்துகிறது என கூறி அந்த கண்ணாடியை மாற்றப்பட்டு, வேறு கண்ணாடியை அணிய தொடங்கினார்.

புதிய கண்ணாடியை விஜயா ஆப்டிகல்ஸ் மூலம், 40 நாட்கள் ஆலோசனைக்கு பிறகு, கலைஞருக்கு ஏற்ற கண்ணாடியை ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் அவர் அணியும் கண்ணாடி பிரேம் கருப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.