மக்களின் நலம் ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை எனவும், கொள்கை வேறு திட்டம் வேறு எனவும் அக்கட்சியின் நிறுவனர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டை மகளிர் தின நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, பெண்களை என்றும் போல் இன்றும் கொண்டாடும் விழா இது எனவும் வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை என சொல்லிக்கொடுத்தவள் என் அம்மா எனவும் தெரிவித்தார். 

தாயிடம் கேட்காமல் தந்தை எந்த பெரிய முடிவையும் எடுப்பதில்லை எனவும் சினிமாவை காப்பாற்ற நிறைய நல்ல கலைஞர்கள் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார். 

3.60 கோடி பெண்களை இந்தியாவில் காணவில்லை எனவும் பிறக்கும் முன்பே தடுக்கப்பட்டுவிட்டனர் எனவும் குறிப்பிட்டார். 

மக்களின் நலம் ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை எனவும், கொள்கை வேறு திட்டம் வேறு எனவும் தெரிவித்தார். 

கொள்கை என்றும் மாறாது எனவும் ஆனால் திட்டம் மாறும் எனவும் கொள்கையை காப்பாற்ற திட்டம் போடுவோம். ஆனால் திட்டம் சரியில்லை என்றால் கொள்கைக்காக மாற்றுவோம் எனவும் அறிவுறுத்தினார்.