Asianet News TamilAsianet News Tamil

திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடையில்லை... உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானைக்கு தடைவிதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Thiruvarur By Election Appeal to ban High Court rejected
Author
Tamil Nadu, First Published Jan 3, 2019, 12:53 PM IST

திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானைக்கு தடைவிதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Thiruvarur By Election Appeal to ban High Court rejected

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பானைக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. கஜா புயல் நிவாரணப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், ஜனவரி 28ஆம் தேதி  தேர்தல் நடத்தினால் நிவாரண பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் பிரசாத் நேற்று முறையிட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க மறுத்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தலைமை நீதிபதி தகில் ரமானி அமர்வில் சத்திய நாராயணனன் என்பவரும்  முறையிட்டிருந்தார்.

 Thiruvarur By Election Appeal to ban High Court rejected

இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானைக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்தனர். கஜா நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டிய மற்றொரு வழக்கில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கு அடுத்த மாதம் பிப்ரவரி 7ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. பிர்பரவரி 7ம் தேதி விசாரணைக்கு வந்தாலும் 28ம் தேதி தேர்தல் நடைபெற தடையில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios