ஜெகன் மோகனின் தந்தையும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ராஜசேகர ரெட்டி ஒரு கிறிஸ்தவர். அவரது தாய்மாமாவான சுப்பாரெட்டியும் கிறிஸ்தவர் என்பது ஆந்திர மாநிலத்தில் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுப்பாரெட்டி இதை மறுத்துள்ளார்.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான தலைவராக ஒரு கிறிஸ்தவரான சுப்பாரெட்டி நியமிக்கப்பட உள்ளதாக  சமூக வலைதளங்களில் பரபரப்பாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2012ல், ஒரு ஆங்கில செய்தி சேனல்  வெளியிட்ட செய்தியில், ரெட்டி சமுதாய ஓட்டுகளை பெற, ஜெகன்மோகன் சார்ந்துள்ள மதத்தை காங்கிரஸ்  தேர்தல் பிரச்னையாக்கியது. 

ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டி , தாத்தா ராஜாரெட்டியும் கிறிஸ்தவர்கள். கடந்த 2009 செப்டம்பர் 3 ல் செய்தி நிறுவனம் ஒன்று, ராஜசேகர ரெட்டி , நடுத்தர கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் என கூறியது.

எனவே கிறிஸ்தவரான சுப்பா ரெட்டியை  திருப்பதி தேவஸ்தான தலைவராக  நியமிக்கக் கூடாது  என இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. சர்ச் அல்லது வாடிகன் பொறுப்பில் ஹிந்து ஒருவரை தலைவராக நியமிக்க முடியுமா ?  என் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ஜெகன்மோகன், கிறிஸ்தவர் என்பதால் தான், சுப்பாரெட்டி நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மசூதிகள், தேவாலாயங்கள், குருத்வாராக்கள் உள்ளிட்ட நிர்வாகங்களை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ நிர்வகிப்பது இல்லை. அதுபோல், கோவில்களை நிர்வகிக்க, தனி ஒரு அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.