Asianet News TamilAsianet News Tamil

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் காலமானார் !! மாரடைப்பால் உயிர் பிரிந்தது !!

thirupparangundram mla a.k.bose expired due to heart arttack
thirupparangundram mla a.k.bose expired due to heart arttack
Author
First Published Aug 2, 2018, 6:19 AM IST


அதிமுக சார்பில் திருப்பங்குன்றம் தொகுதியில் போடியிட்டு வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் எம்எல்ஏ நேற்றிரவு மாரடைப்பால் காலாமானார். அவருக்கு வயது 69.

திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் இவர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார்.  இந்தநிலையில் நள்ளிரவு இரவு உறங்கி கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.  இதனால் குடும்பத்தினர் அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.  மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை சட்டமன்ற உறுப்பினராக ஏ.கே.போஸ் தேர்வானவர்.

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கும் இவர் 2006, 2011 சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டுமுறை எம்.எல்.ஏவாக பதவி வகித்துள்ளார்.

மதுரையில் ஜீவா நகரில் வசித்து வரும் ஏ.கே. போஸ் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.  எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்தாலும் பரபரப்பான அரசியல்வாதியில்லை என்பதால் பலருக்கும் இவரைப் பற்றி தெரியாது.

thirupparangundram mla a.k.bose expired due to heart arttack

69 வயதாகும் ஏ.கே. போஸ் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1993ம் ஆண்டு எம்.ஏ அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை பெயர் கருப்பத்தேவர். இவரது மனைவி பெயர் பாக்யலட்சுமி.

டிராவல்ஸ் அதிபரான போஸ் கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2007ம் ஆண்டு சட்டசபையில் நடைபெற்ற அமளியில்  தொப்பியை சபாநாயகர் மேஜை மீது வீசியதாக பத்து நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கட்சித்தலைவி ஜெயலலிதாவின் கவனம் ஈர்த்தார்.

2011ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்படவே, போஸ், மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறை எம்.எல்.ஏவானர்.

thirupparangundram mla a.k.bose expired due to heart arttack

2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் வடக்குத் தொகுதியில் போட்டியிட மனு அளித்தார் கூடவே திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் துண்டு போட்டார் ஆனால் அவருக்கு ஜெயலலிதா வாய்ப்பு அளிக்கவில்லை. அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற எஸ்.எம்.சீனிவேல் பதிவி ஏற்காமலேயே மரணமடைந்தததால் ஏ.கே. போசுக்கு ஜெயலலிதா வாய்ப்ப்ளித்தார்.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 

அதில், திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏ.கே.போஸ். எம்.எல்.ஏ. ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios