கடந்த சில மாதங்களுக்கு முன்பே மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவரை  ராகுல் மாற்றுவார் என  எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று நீக்கிவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கோஷ்டி பூசலால் தூக்கியடிக்கப்பட்ட திருநாவுக்கரசைப் பற்றி பார்க்கலாமா வாங்க... காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்ட  திருநாவுக்கரசர்  புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1977-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாகவும், ஜெ.வின்  ரைட் ஹேன்ட்டாகவும் அதிமுகவில் வளம் வந்தவர் தான் இந்த திருநாவுக்கரசு எம்.ஜி.ஆர்  ஆட்சிக் காலத்தில் துணை சபாநாயகராக, அமைச்சராக பணியாற்றினார்.

1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். 

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர் அதிமுக உடைந்தது ஜெ.ஜா அணி என ஆன போது, ஜெயலலிதா தலைமையிலான அணியில் இருந்தார் திருநாவுக்கரசர். பின்னர் அதிமுகவை விட்டு விலகி எம்.ஜி.ஆர். அதிமுக என்ற தனிக்கட்சி தொடங்கினார். கட்சி ஆரம்பித்த அதே வேகத்தில், எம்ஜிஆர் அதிமுகவை கலைத்துவிட்டு மீண்டும் அதிமுகவிலேயே இணைந்தார். ஆனால் அவரால் அதிமுகவில் நீடிக்க முடியவில்லை. 

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து வாஜ்பாய் அரசில் மத்திய கப்பல் துறை இணை அமைச்சராகவும், தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவியில் இருந்தார்.

இதனை அடுத்து, பிஜேபியில் இருந்து விலகி 2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த திருநாவுக்கரசர், கட்சியில் சேர்ந்த 7 ஆண்டுகளிலேயே மாநில தலைவர் பதவியை  கைப்பற்றினார். 

இதனையடுத்து அதிமுகவிலுள்ள முன்ன தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். அதுமட்டுமல்ல நிழலுலக அதிமுக என வர்ணிக்கப்படும் மன்னர்குடு குடும்பத்தோடு தொடர்பில் இருந்து வந்தார். இதனை அடுத்து அதிமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சித் தொடங்கிய தினகரனுக்கு ஆதரவாகே இருந்து வந்தார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, சொந்த காட்சியிலேயே பல எதிர்ப்புகளை சந்தித்து வந்தார். பி.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு என யாரையும் விட்டுவைக்கவில்லை ஒட்டுமொத்தத்தை எதிர்ப்பையும் சந்தித்தார். அதுமட்டுமல்லாமல் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது அதிமுகவை ஆஹா... ஓஹோ என தாறுமாறாக புகழ்வது, திமுகவை அப்பப்போ விமர்சிப்பதுமாக இருந்ததால் திமுகவிலிருந்து தலைவரை மாற்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில், பி சிதம்பரத்தை நேரடியாக எதிர்த்ததால் எந்த நேரத்திலும் திருநாவுக்கரசை பதவியிலிருந்து தூக்கியடிக்கப்படலாம் என பேச்சு நிலவிய சமயத்தில் இன்று  அவசர அவசரமாக,  டெல்லிக்கு சென்றார் திருநாவுக்கரசு. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பி.சிதம்பரம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி திருநாவை தூக்கியடித்தார் . ஆமாம், டெல்லியில் நடந்த  ஆலோசனை  கூட்டத்தில் பங்கேற்ற பின் திருநாவுக்கரசர் நீக்கப்பட்ட செய்தியை காங்கிரஸ் தலைமை  வெளியிடப்பட்டது. 

திருநாவுக்கரசு பல அரசியலுக்கு வந்ததிலிருந்து தலைமையில் முக்கிய பொறுப்புகளில் மட்டுமே இருந்து வந்த மர்மம் அவருக்கு மட்டுமே தெரியும்.