ஆளுநரின் தேனீர் விருந்தில் கலந்து கொல்லாமல் புறக்கணிப்பதாக திமுக எடுத்த முடிவு சரியான முடிவு என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் தேனீர் விருந்தில் கலந்து கொல்லாமல் புறக்கணிப்பதாக திமுக எடுத்த முடிவு சரியான முடிவு என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு தொல்லை தரும் விதத்திலும், இடையூறும் தரும் விதத்திலும் மத்திய அரசு ஆளுநர்களை கருவிகளாக பயன்படுத்திருக்கிறது. பல மாநிலங்களில் இதுபோன்ற நடக்கிறது. மத்திய பாஜக அரசு மாற்றான அரசுகள் இருக்கக் கூடிய இடங்களில் எல்லாம் அந்த அரசுக்கு தொல்லை தரும் விதத்தில் ஆளுநர்களை பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது. அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் முதலமைச்சர்களின் அன்றாட நிகழ்வுகளில் இருந்து தொல்லை கொடுப்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுநர்கள் தடையாக இருப்பது சரியான அனுகுமுறையோ நடைமுறையோ அல்ல, சமீப காலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவால் நியமிக்கப்படும் ஆளுநர்களை போல் கடந்த காலங்களில் இருந்த ஆளுநர்கள் நடந்து கொண்டதில்லை. சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றிய பிறகு அதை அனுப்பவேண்டியது கடமை ஆளுநருக்கு உள்ளது.

அதை இடையில் நிறுத்தவேண்டிய அதிகாரம் ஆளுநருக்கு எப்படி உள்ளது, அப்படி தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறி அதைப் பயன்படுத்தினால் அது அதிகார துஷ்பிரயோகம், ஆளுநரின் நடவடிக்கை மீது தமிழக அரசாங்கம் திருப்தியாக இல்லை, மாற்றுக் கருத்தோடு உள்ளது, அதனால் ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் மாற்றவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பின்னர் எப்படி அவர் அலைக்கும் தேநீர் விருந்துக்கு அமைச்சர்களோ என்ன கட்சியினரோ எப்படி கலந்து கொள்வார்கள். திமுக ஆளுநரின் தேனீர் விருந்தில் கலந்து கொல்லாமல் புறக்கணிப்பதாக எடுத்த முடிவு சரியான முடிவு நியாயமான முடிவு. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது சட்டைப்பையிலிருந்து பணம் எடுத்தா தேநீர் விருந்தை நடத்தினார்? அல்லது அண்ணாமலை தாத்தா அல்லது பாட்டனார் இல்லை அவரது சம்பாத்தியத்தில் இருந்து தேனீர் விருந்து நடத்தினாரா? ஆளுநர் செலவு செய்வது மத்திய அரசு, மாநில அரசின் நிதி. மக்களின் வரிப்பணம், அது அண்ணாமலை நிதி கிடையாது கோயில் நிதியும் கிடையாது இதுபோன்று பேசுவது அளவுக்கு மீறிய அநாகரிகமான பேச்சு. கனவு யார் வேண்டுமானாலும் காணலாம் அதற்கு எந்த எல்லையும் கிடையாது, இருபத்தி ஐந்து இடங்களில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக பிடிக்கும் என்றால் மற்ற இடங்களில் ஏன் பிடிக்கவில்லை அதையும் சேர்த்து கனவு காண வேண்டியது தானே, கனவு காண்பதற்கு அண்ணாமலைக்கு உரிமை உள்ளது அந்த கனவு கனவாகவே முடிந்து விடும் எப்போதும் நடைமுறைக்கு வராது. தமிழ் புத்தாண்டு அன்று ஆளுநர் தேனீர் விருந்து வைத்ததால் தான் திமுக மற்றும் தமிழகஅரசு கலந்துகொள்ளவில்லை என்பது முறையான கருத்தல்ல.

ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த அதற்கு தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த நம்பிக்கையும் யார் மீதும் திணிப்பதற்கு உரிமை கிடையாது தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக கொண்டாட அப்போதைய தமிழர்கள் கூறினார்கள் அதையே தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. ஆன்மீகவாதிகள் சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்றும் அதனை ஏற்க முடியாது என்றும் கூறுகின்றனர். எந்த நாளில் மீது நம்பிக்கை உள்ளதோ அந்த நாளில் புத்தாண்டு என்று நினைப்பவர்கள் கொண்டாடட்டும் இல்லை என்றால் இரண்டு நாட்களிளுமே புத்தாண்டை கொண்டாடட்டும். ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி வரவேண்டும் என்பது அமித்ஷாவின் கருத்து அது அமித்ஷாவின் கருத்து மட்டுமல்ல பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்என் கருத்து. ஒரே மதம் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்பது இந்தியாவிற்கு சாத்தியமற்றது. நடைமுறைக்கு சாத்தியமற்றது. தப்பான சித்தாந்தத்தின் படி சொல்லக்கூடிய கருத்துக்கள். ஒரே மொழியை ஒருபோதும் திணிக்க முடியாது. கேந்திர வித்யாலயா பள்ளியில் சேர எம்பிக்களின் பரிந்துரை ரத்து செய்யப்பட்டுள்ளது கவனத்துக்குரியது. இது எம்பிக்களின் உரிமையை பறிப்பது. ஏற்கனவே கொரோனாவை காரணம் காட்டி ஒன்றிய மோடி அரசு இரண்டு ஆண்டுகள் நிதியை நிறுத்திவிட்டு தற்போது தான் அதை எம்பிக்களின் பரிந்துரையை ரத்து செய்வதில் அவர்களுக்கு என்ன மகிழ்ச்சி என்று தெரியவில்லை இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
