இந்துக் கோயில்களை மற்றி அவதூறாக பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் வருத்தம் தெரிவித்தாலும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

 

விடுதலை சிறுத்தைகள் மகளிர் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், கூம்பாக இருந்தால் அது மசூதி, உயரமாக இருந்தால் அது தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில் எனப்பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.  அதற்கு விளக்கமளித்த திருமாவளவன், அவை உரைவீஇச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்கள். அதில் உள் நோக்கம் இல்லை. ஆனால். உண்மை உண்டு. அதற்காக நான் வருந்துகிறேன். ஒருமணி நேரத்துக்கும் மேல் நான் ஆற்றிய உரையில் 10 நொடிகள் இடம்பெற்றுள்ள ஓரிரு சொற்களை மட்டுமே வெட்டியெடுத்து சிலர் பரப்புகின்றனர்’’ எனத் தெரிவித்து இருந்தார். 

 

இதனை தொடர்ந்து திருமாவளவன் இந்துமதத்தை அவமதித்து பேசியதாக அவர் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்ப்பட்டு வருகிறது.  இந்நிலையில், அரசியல் கட்சிகள், நெட்டிசன்கள் என பலரும் திருமாவளவனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

 

‘’அதில், சனி, சூரியனோடு பயணிக்கிறது.  சிதம்பரம்தொகுதி பெரும்பான்மை ஹிந்து மக்களின் ஓட்டுக்களை‌ பெற்றுக்கொண்டு ஹிந்து கோவில்களை அசிங்கம் என்று பேசிய சிதம்பரம் எம்.பி. திருமாவளவன் ஹிந்து மக்களின் சிதம்பரம் கோவில் முன்பு மண்டியிட்டு கட்டாயமாக மன்னிப்பு கோரவேண்டும். இல்லையென்றால் சிதம்பரம் எம்.பி தகுதிநீக்கம் செய்ய வேண்டும். 

 

பாராளுமன்றம் செல்ல முடியாததை அறிந்து வருத்தம் தெரிவித்த திருமாவளவன். ஒரு துளி விஷம் மட்டுமே கலந்த பாலை அருந்துவரா திருமா?  என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.