Asianet News TamilAsianet News Tamil

உண்மை-போலிகளை கண்டறியும் திறன் எமக்கில்லை... இந்திய ராணுவத்தை விமர்சித்த திருமாவளவன்..!

இந்திய ராணுவத்தின் நடத்தையை சந்தேகம் எழுப்பும் வகையில் இழிவுபடுத்திய விசிக தலைவர் தொல் திருமாவளவன் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Thirumavalavan who humiliated the Indian Army
Author
Tamil Nadu, First Published May 29, 2020, 12:39 PM IST

இந்திய ராணுவத்தின் நடத்தையை சந்தேகம் எழுப்பும் வகையில் இழிவுபடுத்திய விசிக தலைவர் தொல் திருமாவளவன் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானோடு மறைமுக தொடர்பில் இருக்கும் தேசவிரோத கட்சிகளின் உறுப்பினர்கள், தேசவிரோதிகள் இந்திய ராணுவத்தை இழிவு செய்யும் விதமாக சமூக வலை தளங்களில் பதிவு செய்யத் தொடங்கினர்.Thirumavalavan who humiliated the Indian Army

இந்தப் போலி படத்தைத் தான், நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன்,   தனது ட்விட்டரில் வெளியிட்டு இந்திய ராணுவத்தை அவமதித்துள்ளார்.  இந்த வீடியோவும் போலியானதாக இருக்குமோ? சமூகவலைத்தளங்களில் பரவும் இதுபோன்றவற்றை உண்மை-போலி என கண்டறியும் திறன் எமக்கில்லை! முதலில் ஒரு படம் யாரோ அனுப்பியது. இப்போது வீடியோ ஒரு தம்பி அனுப்பியது! இல்லாததை- பொல்லாததை இட்டுக்கட்டிச் சொல்லுவதால் எமக்கென்ன பயன்?  எனத் தெரிவித்துள்ளார்.Thirumavalavan who humiliated the Indian Army

திமுக தலைவர்கள் வேண்டுமென்றே தலித் சமூகத்தை இழிவு செய்யும் விதமாகப் பேசி வருவதை எதிர்க்க முடியாமல் "தோழமை சுட்டுதல்" செய்து வரும் திருமாவளவன் மீது தலித் சமூகம் கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு தேச பக்தர் நமக்கு பேட்டியளிக்கும் பொழுது,  "எங்களது நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல்,திமுக தலைமையை எதிர்த்து ஒரு அறிக்கை கூட கொடுக்காமல் இருந்து விட்டு, இப்பொழுது இவ்வாறு இந்தியாவை இழிவு படுத்தும் விதமாக பதிவிட்டு தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்", என்று கூறினார்.

 

இதனைப்பற்றி, மற்றொருவர் கூறும்பொழுது,  "திமுகவின் பணபலத்தை பகைத்துக் கொள்ள முடியாமலும், தலித் சமூகத்தின் கோபத்தை சமாளிக்க முடியாமலும் திருமாவளவன் பெரும் குழப்பத்தில் உள்ளார். இதனால் தனது பேச்சுக்களிலும், செயல்களிலும் பெரிதும் கவனக்குறைவாகவே இருந்து வருகிறார், அவருக்கு மனநல சிகிச்சை செய்வது நல்லது" என்றார். அண்மையில் ஒரு பொய்யான செய்தியின் அடிப்படையில்,  இந்திய தேசத்தின் முதல் குடிமகனான ஜனாதிபதியை இழிவு செய்யும் வகையில் ஒரு ட்வீட் செய்திருந்தார்.

 

இப்போது அதே போல ஒரு போலி செய்தியின் அடிப்படையில் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தி ஒரு பதிவு செய்திருக்கிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு ஜனாதிபதியையும், இந்திய ராணுவத்தையும் கேலி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். திருமாவளவன் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாயலாம் என்று நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios