Asianet News TamilAsianet News Tamil

Thirumavalavan oppose : இந்த மசோதாவை விடவே கூடாது.. இது ஆபத்து.. திமுகவை உதவிக்கு கூப்பிடும் திருமாவளவன்.!

இந்த சட்டத் திருத்த மசோதா மூலம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்னோடு இணைக்க வழிவகை செய்கிறது. தேர்தல் நேரத்தில் வாக்களிக்காத சிறுபான்மையினரை நீக்க இது ஏதுவாக அமைந்துவிடும்.

Thirumavalavan : This bill should not be left out .. it is dangerous .. Thirumavalavan is calling on DMK for help.!
Author
Trichy, First Published Dec 19, 2021, 8:02 PM IST

தேர்தல் சீர்திருத்த மசோதாவை மசோதவை தாக்கல் செய்வதை அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தும் வகையில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல பரிந்துரைகளை சட்ட கமிஷனுக்கு அனுப்பியது.  நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது அதில் சில அம்சங்களுக்கு அனுமதி வழங்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதா தேர்தல் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்கிறது. அந்த மசோதாவில் உள்ள தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Thirumavalavan : This bill should not be left out .. it is dangerous .. Thirumavalavan is calling on DMK for help.!

ஆதார் - வாக்களர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயமாக்கப்படாது. அது தனிநபர் விருப்பத்துக்கு உட்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரே நபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருச்சியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.Thirumavalavan : This bill should not be left out .. it is dangerous .. Thirumavalavan is calling on DMK for help.!

அப்போது அவர் கூறுகையில், “மக்களவையில் நாளை தேர்தல் சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து பல்வேறு மசோதக்கள் தாக்கல் செய்யப்பட்டாலும், இந்த மசோதவை தாக்கல் செய்வதை அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும். இதை ஒரு கோரிக்கையாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் அறிக்கை விட வேண்டும். இந்த சட்டத் திருத்த மசோதா மூலம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்னோடு இணைக்க வழிவகை செய்கிறது. தேர்தல் நேரத்தில் வாக்களிக்காத சிறுபான்மையினரை நீக்க இது ஏதுவாக அமைந்துவிடும். எனவே இது மிகவும் ஆபத்தான மசோதா. இந்த மசோதாவை எல்லா கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios