Asianet News TamilAsianet News Tamil

நடிகர் விவேக் மரணத்திலும் அரசியல் தேடும் திருமாவளவன்..? கடும் எதிர்ப்பு..!

உங்கள் ஒருவனின் பதவி ஆசைக்காக இவ்வளவு தரம் தாழ்ந்து ஒரு உன்னத மனிதனின் இறப்பிலா அரசியல் செய்வது? வெட்கக்கேடு

Thirumavalavan seeks politics in actor Vivek's death? Strong opposition
Author
Tamil Nadu, First Published Apr 17, 2021, 11:07 AM IST

விவேக் மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது, இதனை தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டுமென்று தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.Thirumavalavan seeks politics in actor Vivek's death? Strong opposition

நடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமானதால் எக்மோ கருவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே கூறப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

 

நடிகர் விவேக்கின்  உடலுக்கு திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விவேக் இல்லம் இருக்கும் இடத்தில் 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக முறையாக வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது என்றும் பதிவிட்டுள்ளார்.

Thirumavalavan seeks politics in actor Vivek's death? Strong opposition

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று தகவல் பரவத் தொடங்கியது. ஆனால் நடிகர் விவேக்கின் உடல்நிலை பாதிப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருமாவளவனின் இந்தப்பதிவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. '’ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு விவேக் மிக சிறந்த உதாரணம். ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு மனிதகுலத்திற்கே நீங்கள் ஒருவரே உதாரணம். உங்கள் ஒருவனின் பதவி ஆசைக்காக இவ்வளவு தரம் தாழ்ந்து ஒரு உன்னத மனிதனின் இறப்பிலா அரசியல் செய்வது? வெட்கக்கேடு'’ என பதிலடி கொடுத்துள்ளனர். 

 

’’வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் முயற்சி.பொறுப்பற்ற அரசியல்வாதிக்கு  எடுத்துக்காட்டு என்பதை உணர்த்தும் பதிவு. மரணத்திலும் மலிவு அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தடுப்பூசியை செலுத்தி கொண்ட திருமாவளவன் இப்படி சொல்வது அநாகரீகம் மட்டுமல்ல.தரம் தாழ்ந்த அரசியல்’’ பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios