thirumavalavan pressmeet about karunanidhi birthday

கருணாநிதியின் வைரவிழாவில் தமிழக அரசியல் தலைவர்களையும் அழைத்து பேச வைத்திருக்கலாம் எனவும், கருணாநிதியின் சட்டமன்ற சாதனைகள் குறித்து தேசிய தலைவர்கள் பேச முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் 94 வது பிறந்த நாள் விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அதையொட்டி நேற்றைய தினமே கருணாநிதியின் வைர விழாவும் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் தொடர்புடைய மாநிலங்களின் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களுக்கு திமுக அழைப்பு விடுத்தது.

இதைதொடர்ந்து இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார்,திரிணமூல் காங்கிரஸ் லோக்சபா குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாலர்க்லாய் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கருணாநிதியின் வைரவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது எனவும், தமிழக அரசியல் தலைவர்களையும் அழைத்து பேச வைத்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், கருணாநிதியின் சட்டமன்ற சாதனைகள் குறித்து தேசிய தலைவர்கள் பேச முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.