Asianet News TamilAsianet News Tamil

பாஜக தொண்டனாக கூட இருக்கலாம் ஆனால் ஆர் எஸ் எஸ் தொண்டனாக மட்டும் இருக்கக் கூடாது..! திருமாவளவன் ஆவேசம்

தமிழ்நாட்டை பாஜகவினர் குறி வைத்து விட்டார்கள், யாரு விரட்டுகிறார்களோ இல்லையோ  கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பாஜகவை விரட்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Thirumavalavan has said that BJP cannot set foot in Tamil Nadu
Author
First Published Jan 13, 2023, 4:16 PM IST

ஆளுநருக்கு எதிராக போராட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில்  ஆளுநர் ஆர்.என். ரவி யை எதிர்த்து ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது, போராட்டத்தில் தேசிய அரசியல் குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் சிபிஐ (எம்) மாநில செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா, மாநில செயலாளர் (சிபிஐ) இரா. முத்தரசன், திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  போராட்டத்தில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட கட்சி மாநில செயலாளர் முத்தரசன், ஆளுநராக பொறுப்பேற்ற போது தமிழ்நாடு ஆளுநராகிய நான் என்று தான் பொறுப்பேற்றார். ஆனால் இப்பொது தமிழ் நாடு வேண்டாமா என ஆளுநருக்கு கேள்வி எழுப்பினர்.

சென்னையில் பிரம்மாண்டமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு.! எப்போது என தெரியுமா.? முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Thirumavalavan has said that BJP cannot set foot in Tamil Nadu

ஆர் என் ரவி டெல்லி சென்றது ஏன்.?

தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதித்தது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களின் பெயர்களை உச்சரிக்க மறுத்தது போன்ற ஆளுநரின் செயலானது மிகவும் கண்டிக்க கூடிய செயலாக அமைந்து இருப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது கூட ஆளுநர் டெல்லிக்கு எதற்காக போய் இருக்கிறார் என்று தெரியவில்லை ஒரு வேலை மோடி, அமித்ஷாவை சந்தித்து நீங்கள்  சொன்ன மாதிரி நான் தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டுகிறேன். ஆனால் தனக்கு வரும் எதிர்ப்பினால் என்ன செய்வதென்று தெரிவியவில்லை என சொல்ல தான் சென்றிருக்கிறார் என  நினைப்பதாக கூறினார்.  

ஆன்லைன் சூதாட்டத்தால் பொறியாளர் சாவு..! 41 பேர் பலியாகியும் ஆளுனரின் மனம் இரங்கவில்லையா? - அன்புமணி கேள்வி

Thirumavalavan has said that BJP cannot set foot in Tamil Nadu

தமிழ்நாட்டுக்கு ஆளுநர் ஆனதே பிரச்சனை தான்

இதனை தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், ஆளுநர் சட்ட சபையில் செய்த செயல் மட்டும் பிரச்சனை இல்லை. இவர் தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ஆனது தான் முக்கிய பிரச்சனை என்றார். ஆளுநர் ஒரு வடிகட்டிய ஆர்எஸ்எஸ் தொண்டர் என கூறியவர்,  அவர் பேசும் அனைத்து அரசாங்க நிகழ்ச்சிகளிலும் சனாதனம் என்பது ஒலித்து கொண்டே இருப்பதாக விமர்சித்தார்.  ஆளுநருக்கான தனி அதிகாரம் கிடையாது, தமிழ் நாடு அரசாங்கத்திற்கு கீழ் தான் அவர் செயல் இருக்க வேண்டும் என கூறினார்.  

தமிழகத்தை குறி வைத்த பாஜக

ஆளுநரக நியமிக்கபட்டவர் அரசியல் கட்சியாளராக செயல் படக்கூடாது. ஆனால் அவர் முழுமையாக அரசியல்வாதியாக மட்டும் தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். பிஜேபி கட்சியில் கூட இருக்கலாம் ஆனால் ஆர் எஸ் எஸ் தொண்டனாக மட்டும் இருக்க கூடாது ஏனெனில் அது ஒரு ஆபத்தான கட்சியாகும் என தெரிவித்தார்.தமிழ்நாட்டை பிஜேபி குறி வைத்து விட்டார்கள். யாரு விரட்டுகிறார்களோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் விரட்டும் என கூறினார்.

இதையும் படியுங்கள்

விவசாய நிலம் பாதிப்புக்கு அப்போ 30 ஆயிரம்..! இப்போ 13 ஆயிரமா..? திமுக அரசை இறங்கி அடிக்கும் எஸ்.பி.வேலுமணி

Follow Us:
Download App:
  • android
  • ios