Asianet News TamilAsianet News Tamil

விவசாய நிலம் பாதிப்புக்கு அப்போ 30 ஆயிரம்..! இப்போ 13 ஆயிரமா..? திமுக அரசை இறங்கி அடிக்கும் எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில்  தமிழக மக்கள் படும் இன்னல்கள் குறித்து பேசிய உரையை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என மிரட்டப்படுவதாக எதிர்க்கட்சி கொறடா எஸ் பி வேலுமணி சாட்டியுள்ளார்.

SP Velumani has accused the DMK government of threatening the media not to publish Edappadi Palaniswami news
Author
First Published Jan 13, 2023, 2:54 PM IST

சட்டப்பேரவையில் இபிஎஸ்

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.  இதனையடுத்து இன்றோடு சட்டப்பேரவை நிகழ்வு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களர்களை சந்தித்த எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி தமிழகத்தில் மக்கள் படும் இன்னல்கள் குறித்து இரண்டு மணி நேரம் பேசியதாக தெரிவித்தார். தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளான கொரோனா காலத்தில் பணி செய்த செவிலியர்களை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தியதாக குறிப்பிட்டார். 

அதிரடி அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு..!

SP Velumani has accused the DMK government of threatening the media not to publish Edappadi Palaniswami news

விவசாயிகளுக்கு இழப்பீடு 13ஆயிரமா.?

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி காலதாமதம்,  திருவாரூர் குடவாசல் கலைக்கல்லூரி இடமாற்றம் பிரச்சனை,  குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என்பது குறித்தும் பல்வேறு பிரச்சனைகளை பற்றி பேசியதாக குறிப்பிட்டார். ஆனால் இதனை எந்த ஊடகங்களும் ஒளிபரப்ப வில்லை என்றும் தமிழகத்தில் உள்ள ஊடகங்களை ஆளுங்கட்சி மிரட்டி வருவதாகவும் இதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் கூறினார்.  திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என குரல் கொடுத்து விட்டு தற்போது ஆளுங்கட்சியாக ஆன பின் 13 ஆயிரம் ரூபாய் ஏக்கருக்கு கொடுக்கிறார்கள் என்றும் அதை 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

டெல்லி செல்லும் ஆளுநர்.! பிரதமரிடம் ஸ்டாலின், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கொடுக்கிறாரா? வெளியான பரபரப்பு தகவல்

SP Velumani has accused the DMK government of threatening the media not to publish Edappadi Palaniswami news

ஊடகங்களை மிரட்டும் திமுக

கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவு கடன் வாங்கியதாக குற்றம் சாட்டிய திமுக, தற்போதைய ஆட்சியில் இருக்கும் திமுக அரசு 20 மாதங்களில்  வரைமுறை இல்லாமல் பல்லாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டினார்.  தமிழகத்தில் நிலவி வரும்  சட்டம் ஒழுங்கு சீர்கேடு போதைப் பொருட்கள் நடமாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் விமர்சித்தார்.  

இதையும் படியுங்கள்

சென்னையில் பிரம்மாண்டமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு.! எப்போது என தெரியுமா.? முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios