Asianet News TamilAsianet News Tamil

அதிரடி அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு..!

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில் விருப்ப ஓய்வுபெற்ற கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். பின்னர், எல்.முருகன் மத்திய இணை அமைச்சரானதை அடுத்து அந்த பொறுப்புக்கு மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

central government will provide z-category security to BJP TamilNadu state president Annamalai
Author
First Published Jan 13, 2023, 12:07 PM IST

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.  

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில் விருப்ப ஓய்வுபெற்ற கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். பின்னர், எல்.முருகன் மத்திய இணை அமைச்சரானதை அடுத்து அந்த பொறுப்புக்கு மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி அரசியல் மூலம் பாஜகவை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக ஆளும் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளுங்கட்சியை அலறவிட்டு வருகிறார். 

இதையும் படிங்க;- பாஜகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்.. அதிரடி காட்டும் அண்ணாமலை..!

central government will provide z-category security to BJP TamilNadu state president Annamalai

இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள், மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தற்போது Y பிரிவு பாதுகாப்பில் உள்ள அண்ணாமலைக்கு Z பிரிவாக உயர்த்தப்படுகிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர். 

இதையும் படிங்க;-  நான் அப்பவே சொன்னேன்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி.. எச்.ராஜா..!

central government will provide z-category security to BJP TamilNadu state president Annamalai

மேலும், அண்ணாமலை வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios