thirumavalavan condemns gayathri raguram

காய்த்ரி ரகுராம் பிக்பாஸில் 100 நாட்கள் இருப்பதை விட சேரி மக்களுடன் 10 நாட்கள் வாழ்ந்திருந்தால் தவறான கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார் என விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி கமலஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடிகையும் நடன இயக்குனருமான காய்த்ரி ரகுராம் தன்னுடன் தங்கி இருக்கும் சக போட்டியாளர்களை சேரி பிகேவியர் என திட்டினார்.

இதற்கு தமிழத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் காயத்ரி ரகுராமை கைது செய்ய கோரியும், பிக்பாஸ் நிகழ்ச்சியை கைது செய்ய கோரியும் போலீசில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் இதுகுறித்து கமலஹாசனிடம் கேள்வி எழுப்பியதற்கு அது நான் எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட் கிடையாது எனவும் நான் சொல்லி தந்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன் எனவும் கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.

இதனிடையே இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காய்த்ரி ரகுராம் பிக்பாஸில் 100 நாட்கள் இருப்பதை விட சேரி மக்களுடன் 10 நாட்கள் வாழ்ந்திருந்தால் தவறான கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார் என தெரிவித்தார்.