அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில் என்ற திருமாவளவன் அவர்களே, அசிங்கத்தை பார்க்க போனது ஏனோ? 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோயிலி நடந்த கும்பாபிஷேகத்தில் அர்ச்சகர்களுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் நடந்த கம்பன் கழக விழாவில் பேசிய திருமாவளவன், '’கூம்பாக இருந்தால் அது மசூதி. உயரமாக இருந்தால் அது தேவாலயம். அசிங்கமான பொம்மைகள் இருந்தால் கோவில் என அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் திருமாவளவன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

Scroll to load tweet…

பாஜக ஆதரவாளரான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நிறைய அசிங்கமான பொம்மைகள் இருக்கிற இடத்தை ஆசையோட பாக்க வந்த அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க’’என பகிர்துள்ளார்.

Scroll to load tweet…

பாஜக துணை செயலாளர் நாராயணன் திருப்பதி, ‘’அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில் என்ற திருமாவளவன் அவர்களே, அசிங்கத்தை பார்க்க போனது ஏனோ? கேவலம் ஓட்டு பிச்சைக்காக தானே? வெட்கக்கேடு என்று உணர்வீர்களா?’’என பதிவிட்டுள்ளார். இன்னும் ஏராளமானோர் இந்த புகைப்படங்களில் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

Scroll to load tweet…