சிதம்பரம்  தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனுக்கும், கரூரில் போட்டியிட்ட முன்னாள் துணை சபா தம்பிதுரைக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு போரையும் கடைசி ரவுண்டு வரை கதிகலங்க விட்ட சம்பவம் வாக்கு என்னும் மையத்தில் நடந்துள்ளது.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் திருமாவளவனும், அதிமுக. சார்பில் சந்திரசேகரும், அ.ம.மு.க. சார்பில் இளவரசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவஜோதி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 பேர் போட்டியிட்டனர்.

கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது இந்த தொகுதியில் 77.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் எண்ணப்பட்ட இந்த வாக்குகள்  25 சுற்றுகளாக எண்ணப்பட்டது. இதில் முதல் சுற்றில் திருமாவளவன் முன்னிலை வகித்தார். அடுத்தடுத்து 9-வது சுற்று வரை அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரனும் முன்னிலை வகித்தார். பின்பு 10-வது சுற்றில் இருந்து கடைசி சுற்று வரை திருமாவளவனும், சந்திரசேகரும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தனர். 

கடைசி ரவுண்டில் திருமாவளவன் 4,98,401 வாக்குகளும், சந்திரசேகர் 4,95,432 வாக்குகளும், அமமுக இளவரசன்  62,219 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சிவஜோதி  37,329 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் ரவி 15,260 வாக்குகளும் பெற்று இருந்தனர். 

தபால் வாக்குகளில் திருமாவளவனுக்கு 1,828 வாக்குகளும், சந்திரசேகருக்கு 1,578 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 142 வாக்குகளும், அ.ம.மு.க.விற்கு 89 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்துக்கு 74 வாக்குகளும், நோட்டாவுக்கு 56 வாக்குகளும் கிடைத்தன. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடித்தது. இறுதியில் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் திருமாவளவன் தான். 

அதே போல இந்த தேர்தலில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது அது என்னன்னா? கரூர் தொகுதியில் முன்னாள் துணை சபாவான் தம்பிதுரையை கடைசி ரவுண்டு வரை கதிகளங்கவிட்டுள்ளார் திமுக கூட்டணி வேட்பாளரான ஜோதிமணி, அதாவது இரண்டு அமைச்சர்களை அசால்ட்டாக ஓவர் டேக் செய்து நான் தான் கெத்துன்னு சிறப்பான சம்பவம் செய்துள்ளார் செந்தில் பாலாஜி.

ஆமாம், அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட 17 தொகுதிகளிலும் குறைந்தபட்சமாக 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வாங்கி தோல்வி அடைந்துள்ளனர். ஆனால் கரூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 2,75,151 வாக்குகள் வாங்கி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் தோல்வி அடைந்தார். ஜோதிமணி 6,95,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி வித்தியாசம் 4,20,546 ஆகும். ஏற்கனவே அதிமுகவில் இருக்கும் போதே தம்பிதுரைக்கும் செந்தில்பாலாஜிக்கும் ஏழாம் பொருத்தம். இந்நிலையில், அமமுகவில் இருந்து விலகி திமுவில் இணைந்த செந்தில்பாலாஜி, தம்பிதுரை தோற்கடிக்க வேண்டும் தனக்கு எதிற்றாக வேலை பார்க்கும் அமைச்சர்களான இரண்டு விஜயபாஸ்கர்கள் பிளானையும் முறியடிக்கணும் என  தான் ஜெயித்தது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஜோதிமணியை வைத்து மரண அடி கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி, 

அதன்படி, அதிமுக வேட்பாளர்களிலேயே குறைந்த அளவு ஓட்டு பெற்றது முன்னாள் அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தான். இதில் கொடுமை என்னன்னா? ஒரு ரவுண்டு கூட விடலாம் கடைசி ரவுண்டு வரை விடாமல் விரட்டி விரட்டி அடித்துள்ளார் ஜோதிமணி. அதிலும்  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொகுதியான கரூரிலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியான விராலிமலையிலும் பல்க்கா வாக்குகளை அள்ளி கொடுத்து சிறப்பான சம்பவம் செய்துள்ளார் செந்தில் பாலாஜி. ஆமாம், விராலிமலையில் தம்பிதுரைக்கு, 40104 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது ஆனால், ஜோதிமணிக்கு 10,6,352 ஓட்டுகள் கிடைத்துள்ளன. கரூர் தொகுதியில் தம்பிதுரைக்கு, 48,616 ஓட்டுகள், ஆனால் ஜோதிமணிக்கு, 1,11,333 ஓட்டுகள் கிடைத்துள்ளன.