Asianet News TamilAsianet News Tamil

எம்ஜிஆர், ஜெயலலிதா போல் இதை செய்ய துணிந்து முன்வர வேண்டும்... எடப்பாடிக்கு திருமாவளவன் அட்வைஸ்!!

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல சமூக நீதிக்கான ஓர் இயக்கமாகவே அதிமுகவை தொடர்ந்து நடத்துவதற்கு துணிந்து முன்வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். 

thirumavalavan advised eps to have the courage to run admk as a movement for social justice
Author
First Published Mar 28, 2023, 8:29 PM IST

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல சமூக நீதிக்கான ஓர் இயக்கமாகவே அதிமுகவை தொடர்ந்து நடத்துவதற்கு துணிந்து முன்வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கட்சி தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று வரும்போது, எடப்பாடி பழனிசாமியை பாஜக தேர்வு செய்திருக்கிறது. இதுதான் அவர்களுடைய அணுகுமுறையில் இருந்து தெரியவருகிறது.

இதையும் படிங்க: அன்று சசிகலா இன்று எடப்பாடி பழனிசாமி; முடிவை நோக்கி... கே.சி.பழனிசாமி சூசகம்!!

எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்டபூர்வமாக வென்றிருக்கிறார்கள், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டாலும் இதில் பாஜக மற்றும் சங்பரிவார்களின் ஆதரவும் பின்னணியில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளராக செயல்படக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவருக்கு நான் தோழமையோடு விடுக்கின்ற வேண்டுகோள், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூக நீதிக்காக தமிழகத்தில் குரல் கொடுத்திருக்கிறார்கள். சமூக நீதியை பாதுகாத்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இதையும் படிங்க: சமூக நீதியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னோடி மாநிலம் - அழகிரி பேச்சு

அந்த சமூக நீதிக் கொள்கைக்கு நேர் எதிரியாக இருக்கக்கூடிய பாஜகவை தூக்கி சுமப்பது, எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கருத்தியல் அடிப்படையில் செய்கிற மாபெரும் துரோகம் ஆகும். எனவே எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களை நெஞ்சிலே நிறுத்தி சமூக நீதிக்கான ஓர் இயக்கமாகவே அதிமுகவை தொடர்ந்து நடத்துவதற்கு துணிந்து முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சமூக நீதி களத்தில் நானும் நிற்பதால், இந்த வேண்டுகோளை நான் அவருக்கு வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios