Asianet News TamilAsianet News Tamil

சமூக நீதியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னோடி மாநிலம் - அழகிரி பேச்சு

சமூக விடுதலை, சமூக மேம்போக்கு, சமூகத்தில் சமத்துவம், சமூக நீதி என்பதற்காக இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Tamil Nadu is the pioneer state in India in terms of social justice Alagiri speech
Author
First Published Mar 28, 2023, 4:54 PM IST

தந்தை பெரியார் தீண்டாமைக்கு எதிராக வீறு கொண்டு போராடிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினையொட்டி ஈரோட்டில் இருந்து கேரளாவிற்கு வாகன பேரணி துவங்கியது. இந்த வாகன பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், தந்தை பெரியாரின் பல்வேறு சமூக புரட்சிகளில் வைக்கம் புரட்சியும் ஒன்றாகும். அந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக தந்தை பெரியாரின் நினைவிடத்திற்கும், ஈரோட்டிற்கு வருகை புரிந்து தந்தை பெரியார் அவர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு, வைக்கம் நிகழ்வுகளை நடத்துவது என்று கேரளா காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

பாம்பு வாந்தி எடுத்ததாகக் கூறி போலி நவரத்தினம் விற்பனை; பக்தர்களுக்கு விபூதி அடித்த போலி சாமியார்

அதன் விளைவாக கேரளா காங்கிரஸ் வி.டி பல்ராம் தலைமையில், கேரளாவில் இருந்து காங்கிரசார் வந்துள்ளனர். தமிழகம் வைக்கம் போராட்டத்தில் தமிழகம் பெரும் பங்காற்றியது என்ற அடிப்படையில் தமிழகத்தின் அமைச்சராக இருக்கின்ற சு.முத்துசாமி தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கலந்து கொண்டுள்ளார்.

தந்தை பெரியார் என்றால் வைக்கம் நினைவுக்கு வரும், அந்த அளவிற்கு இதனை ஒரு சமூக பிரச்சினையாகவும், தேசிய பிரச்சினையாக்கினார், அதனுடைய தாக்கத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றார், காந்தியடிகளின் கவனத்தை ஈர்த்தது, அதனுடைய விளைவாகத்தான், ஐயாயிரம் ஆண்டுகளாக அனுமதிக்கபடாத இடத்தில், மக்கள் உள்ளே சென்று வழிபாடு மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர், இதற்கு காரணம் அன்றை தினம் தமிழக காங்கிரஸ் தலைவர் பெரியார் என்பதும், அவரின் பெரு முயற்சியும் ஒரு காரணமாக அமைந்தது.

தமிழகம் எப்போதும் சமூக சீர்திருத்தத்தின் பக்கம் நின்றிருக்கிறது, அது தேசிய இயக்கமாக இருந்தாலும் சரி, திராவிட இயக்கமாக இருந்தாலும் சரி, பொதுவுடமை இயக்கமாக இருந்தாலும் சரி, அல்லது விடுதலை சிறுத்தை கட்சி போன்ற இயக்கங்களாக இருந்தாலும் சரி, சமூக விடுதலை, சமூக மேம்போக்கு, சமூகத்தில் சமத்துவம், சமூக நீதி என்பதற்காக இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடியாக இருந்திருக்கிறது, இந்த முன்னோடியாக திகழ்வதற்கு மாபெரும் தலைவர்கள் கால்பட்ட இடம் ஈரோடு, ஆகையால் கேரளா காங்கிரஸ் செய்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியில், திமுக, தமிழக காங்கிரஸ் பங்கெடுத்துள்ளது சென்றார் என கூறினார்.

புதுவையில் சிறுமி கற்பழித்து கொலை; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

இந்நிகழ்வில், தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி, கேரளாவைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்களான இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் எம்எல்ஏ வி.டி பல்ராம், சி சந்திரன், வழக்கறிஞர் பி ஏ சலீம்  ஆகியோருடன் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பின் எழுச்சி பயணமாக கேரளம் செல்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios