அன்று சசிகலா இன்று எடப்பாடி பழனிசாமி; முடிவை நோக்கி... கே.சி.பழனிசாமி சூசகம்!!

சசிகலாவுக்கு ஏற்பட்ட முடிவை நோக்கி எடப்பாடி பழனிசாமி பயணிப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

kc palanisamy slams edapadi palanisamy regarding mgr getup video

சசிகலாவுக்கு ஏற்பட்ட முடிவை நோக்கி எடப்பாடி பழனிசாமி பயணிப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். இதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காதது சரியல்ல.. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.. அன்புமணி ராமதாஸ்..!

அதை தொடர்ந்தும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு எம்ஜிஆர் அணிந்திருக்கும் தொப்பி, கருப்பு கண்ணாடி, சால்வை ஆகியவை வழங்கினர். இவை அணைத்தையும் ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அவைகள் அணிந்த பின் எம்.ஜி.ஆர் போல் காட்சியளித்தார். இதை கண்டு அவரது தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் எழுப்பினர்.

இதையும் படிங்க: சமூக நீதியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னோடி மாநிலம் - அழகிரி பேச்சு

இந்த நிலையில் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிரர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, இதே போன்று தான் சசிகலாவும் அம்மாவைப்போல போலி வேடமிட்டார் அவருக்கு இறுதியில் என்ன நிகழ்ந்தது என்பதை நாடறியும் அதே முடிவை நோக்கி எடப்பாடி பழனிசாமி பயணிக்கிறார் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். போல இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios