Asianet News TamilAsianet News Tamil

தப்பு இல்லாமல் 2 முறை சரியா சொல்லமுடியுமா..? மு.க.ஸ்டாலினுக்கு பாஜக சவால்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு இந்த எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாக பொருளுடன் உச்சரித்தால், அந்த பதிவை நீக்கி விடுகிறோம் என தமிழக பாஜக கிண்டல் செய்துள்ளது.

thirukkural without mistake... BJP challenge to MK Stalin
Author
Tamil Nadu, First Published Nov 4, 2019, 12:35 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு இந்த எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாக பொருளுடன் உச்சரித்தால், அந்த பதிவை நீக்கி விடுகிறோம் என தமிழக பாஜக கிண்டல் செய்துள்ளது. 

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். இதுகுறித்து தமிழக பாஜக வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின், கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 

thirukkural without mistake... BJP challenge to MK Stalin

மேலும், காவி நிற உடை, விபூதி, குங்குமத்துடன் திருவள்ளுவர் புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தது. இதற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்! என கூறியிருந்தார். 

 

இதற்கு பதிலளித்துள்ள தமிழக பா.ஜ.க. தனது டுவிட்டர் பதிவில், "யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' இக்குறளை பொருளுடன் தப்பின்றி, இருமுறை உச்சரித்தால், அப்பதிவை நீக்கி விடுகிறோம் மு.க.ஸ்டாலின் என பதிவிட்டுள்ளது. இதனை பலரும் டுவிட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios