Asianet News TamilAsianet News Tamil

நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்... அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

thirty thousand per acre should be given as compensation for paddy crops says gk vasan
Author
First Published Feb 7, 2023, 6:07 PM IST

மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை அறிவித்துள்ளது போதுமானது அல்ல. குறிப்பாக டெல்டா மாவட்டப் பகுதிகளில் சேதமான நெற்பயிர்களுக்கும், உளுந்துக்கும் அறிவித்துள்ள நிவாரணம் விவசாயிகளின் முதலீட்டையும், செலவையும் ஈடுகட்டும் விதமாக அமையவில்லை.

இதையும் படிங்க: விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக!.. அலட்சிய போக்கு வேண்டாம் - தமிழக அரசி விமர்சித்த அண்ணாமலை!

அதாவது விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவு நட்டு, உரம் போட்டு, பாதுகாத்து பயிர் செய்தார்கள். இந்த நிலையில் பயிரிட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் தருவாயில் மழையினால் சேதமுற்றது. கடந்த 4 மாத காலமாக நெற்பயிர் விளைச்சலுக்கு நடவு முதல் அறுவடை வரை உழைப்பை மேற்கொண்ட விவசாயிகளின் உழைப்பும் வீணாகிவிட்டது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை.... அறிவித்தார் டிடிவி தினகரன்!!

செலவு, உழைப்பு இவற்றை கவனத்தில் கொண்டால் நெற்பயிர்களின் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கினால் தான் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஓரளவுக்கு நஷ்டத்தில் இருந்து விடுபடுவார்கள். எனவே தமிழ்நாடு அரசு, மழையினால் சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios