காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தன் ஆடையை போலீசார் கிடைத்துவிட்டனர் என வெளியிட்டுள்ள வீடியோ தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தன் ஆடையை போலீசார் கிடைத்துவிட்டனர் என வெளியிட்டுள்ள வீடியோ தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு புகார்களை கூறி ரெய்டு, கைது நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. வருமான வரித்துறை அமலாக்கத்துறை, என என பல சோதனைகள் எதிர் முகாம்களை குறிவைத்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை விவகார்த்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறை கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறது. மொத்தமாக அவரிடம் 31 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு கேள்விகள் கேட்டுத் துலைத்தெடுக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து அமலாக்கத்துறை நடத்திவரும் விசாரணை காங்கிரஸ் கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல மாநிலங்களில் இருந்து டெல்லி வருகை தந்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அமலாக்கத் துறையின் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்நாள் போராட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ரந்தீப் சுர்ஜேவாலா, கே.சி வேணுகோபால், சத்தீஷ்கர் மாநில முதல்வர் பூபேந்திர சிங் பாதல், ஜெயராம் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்துகொண்டார் அதில் அப்போது போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின்போது போலீஸார் தனது ஆடையை கிழித்ததாக அவர் தலைவிரி கோலமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய ஆடை கிழிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீசார் என்னை மிக கீழ்த்தரமாக நடத்தினர், வரம்பு மீறி பெண்ணென்றும் பாராமல் ஆடையைக் கிழித்து கைது செய்தனர். தண்ணீர் கூட கொடுக்கவில்லை, இப்போது எங்களை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று தெரியவில்லை, தண்ணீர் பாட்டில் வாங்க கூட அனுமதிக்கவில்லை, இந்த நாட்டில் பெண்களுக்கு இந்த நிலைமை என்றால், சாமானியர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள், எனக்கு ஏற்பட்ட இந்நிலை யாருக்குமே ஏற்படக் கூடாது என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல காங்கிரஸ் தலைவர்கள் நிர்வாகிகள் ஜோதிமணிக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர். போராட்டக் களத்திற்கு வந்து போராடும் ஒரு பெண்ணை இப்படி வரம்புமீறி நடத்துவது இந்திய நாகரிகத்துக்கு எதிரானது. ஒரு பெண்ணை இப்படி மோசமானது போலீஸார் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சபாநாயகர் ஓம் பிர்லா இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார். ஜோதிமணி இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.