இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் மந்த நிலை, பொருளாதார பின்னடைவு மற்றும் ஜிடிபி அதலபாதாளத்திற்கு போய்கொண்ருப்பது போன்றவை எதனால் ஏற்பட்டுள்ளது, இதில் இருந்து நாடு மீள்வது என்னடி என்பது குறித்து முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுநருமான மன்மோக்ள் சிங் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை இந்தியாவின் நிதியமைச்சராகப் பணியாற்றியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். நிதித் துறைக்கான நிலைக்குழுவில் மன்மோகன் சிங் இருந்தபோது, பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தீவிரமாகச் செயல்பட்டார். அதைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசின் நிலைக்குழுவில் மீண்டும் மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
.
இந்த நிலையில், ஆங்கில நாளிதழில் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிடிபி கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாக உள்ளது. வீட்டு நுகர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வங்கி வாராக் கடன் எப்போதும் இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. மின்சார உற்பத்தி வளர்ச்சி 15 ஆண்டுகள் இல்லாத அளவு குறைந்துள்ளது.
இதுபோல கீழே போயிருப்பவற்றின், அதிகமாயிருப்பவற்றின் பட்டியல் நீள்கிறது. வருத்தம் தரும் இத்தகைய புள்ளிவிவரங்களால் பொருளாதார நிலை கவலை தருகிறது என்று கூறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் மேலும் ஆழமான சிக்கலின் வெறும் வெளிப்பாடுகள் மட்டுமே இவை” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் மன்மோகன் சிங்.
தொழில்முனைவோரிடம், வங்கியாளர்களிடம், தொழிலதிபர்களிடம் அச்சம் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், பல தொழிலதிபர்கள் அரசாங்க அதிகாரிகளின் துன்புறுத்தலுக்கு பயந்து வாழ்கிறார்கள். பழிவாங்கும் பயத்தில் வங்கியாளர்கள் புதிய கடன்களை வழங்க தயங்குகிறார்கள். தொழில்முனைவோர் புதிய திட்டங்களைத் தயாரிக்க தயங்குகிறார்கள். தோல்வியின் பயம் வெளிப்புற நோக்கங்களுக்காகக் கூறப்படுகிறது.
உதவியற்ற ஒரு நிலை நிலவுகிறது. வேதனை அடைந்த குடிமக்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்த எங்கும் இடமில்லை. ஊடகங்கள், நீதித் துறை, ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் விசாரணை முகவர் போன்ற சுயாதீன நிறுவனங்கள் மீதான பொது நம்பிக்கை கடுமையாக அழிக்கப்பட்டுள்ளது என மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் மீதான தனது ஆழமான வேரூன்றிய சந்தேகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பொருளாதாரம் புத்துயிர் பெறக்கூடிய வகையில் சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்” எனக் அந்த கட்டுரையில் மன்மோகன் சிங். தெரிவித்தள்ளார்
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 19, 2019, 10:17 AM IST