Asianet News TamilAsianet News Tamil

எங்கள் காலம் வரும் போது காவி கட்டும் பாஜக கூட்டம் இருக்காது... சீமான் ஆவேசம்..!

காங்கிரஸ் இனத்தின் எதிரி, பாஜக மனித குலத்தின் எதிரி எந்த காலத்திலும் அவர்களுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ளார். 
வருகிற உள்ளாட்சி தேர்தலில் ஆதித்தமிழர், தமிழ் தேசிய இயக்கம் மற்றும் தமிழக மக்களின் ஆதரவுடன் வேட்பாளரை அறிவித்து வெற்றி பெறுவோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 117 ஆண்கள், 117 பெண்கள் வேட்பாளர்களை ஜனவரி மாதத்தில் அறிவிப்போம் என கூறினார்.

There will be no BJP gathering...Seeman obsession
Author
Tamil Nadu, First Published Nov 14, 2019, 6:24 PM IST

திருவள்ளுவர் இருந்தபொழுது இந்தியாவும் இல்லை, இந்து மதமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் சோமாலியா, எத்தியோபியா வெனிசுலா போன்று எங்களது நாடு போய் விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம். மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற திட்டங்களை அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியின்போது கையெழுத்திட்டு விவசாயத்தை சீர்குலைத்து விட்டார்கள். அதனால் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை. இது எங்கள் கட்சி கொள்கை முடிவு. நாங்கள் எப்போதும் தன்னிச்சையாகவே தேர்தல் களத்தில் விளையாடுவோம் என்றார்.

There will be no BJP gathering...Seeman obsession

மேலும், பேசிய அவர் காங்கிரஸ் இனத்தின் எதிரி, பாஜக மனித குலத்தின் எதிரி எந்த காலத்திலும் அவர்களுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ளார். வருகிற உள்ளாட்சி தேர்தலில் ஆதித்தமிழர், தமிழ் தேசிய இயக்கம் மற்றும் தமிழக மக்களின் ஆதரவுடன் வேட்பாளரை அறிவித்து வெற்றி பெறுவோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 117 ஆண்கள், 117 பெண்கள் வேட்பாளர்களை ஜனவரி மாதத்தில் அறிவிப்போம் என கூறினார். 

There will be no BJP gathering...Seeman obsession

திருவள்ளுவர் இருந்தபொழுது இந்தியாவும் இல்லை. இந்து மதமும் இல்லை. எங்கள் காலம் வரும் போது காவி கட்டும் பாஜக கூட்டமும் இருக்காது என ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios