ராஜராஜ சோழன் காலத்தில் தமிழ்நாடு என்ற ஒன்றே இல்லை.. திருப்பி அடித்த பாஜக அமைப்பு செயலாளர் பி.எல் சந்தோஷ்.
ராஜராஜ சோழன் காலத்தில் தமிழ்நாடு என்ற ஒன்று இல்லை என பாஜக மூத்த தலைவர் பி.எல் சந்தோஷ் கூறியுள்ளார். ராஜராஜன் சோழன் காலத்தில் இந்து என்ற ஒரு மதமே இல்லை என தமிழகத்தில் விமர்சனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் பி. எல் சந்தோஷம் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்
.
ராஜராஜ சோழன் காலத்தில் தமிழ்நாடு என்ற ஒன்று இல்லை என பாஜக மூத்த தலைவர் பி.எல் சந்தோஷ் கூறியுள்ளார். ராஜராஜன் சோழன் காலத்தில் இந்து என்ற ஒரு மதமே இல்லை என தமிழகத்தில் விமர்சனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் பி. எல் சந்தோஷம் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜராஜ சோழன் இந்து மன்னர் இல்லை என்றால் இத்தனை பெரிய சிவன் கோவில் எப்படி கட்டியிருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சோழப்பேரரசை மையமாக வைத்து பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கப்பட்டு அது வெளியாக இருக்கிறது. ராஜராஜ சோழன் இந்து மன்னனாக சித்திரிக்க முயற்சி நடந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பேசிய அவர், சினிமா என்பது கலைவடிவம், அதை சரியாக பயன்படுத்த வேண்டும் , சினிமா மூலமாக அரசியலை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும், அப்படிப்பட்ட சினிமாவை சரியாக பயன்படுத்த வேண்டும், சினிமாவை வைத்து நம்மிடம் உள்ள அடையாளங்களை பறிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: முதல்வரின் முதுகில் குத்துகிறார் தமிழிசை - நாராயணசாமி காட்டம்
திருவள்ளுவருக்கு காவி உடை போர்த்துவது, ராஜராஜனை இந்துவாக சித்தரிப்பது போன்றவை நடந்து வருகிறது என கூறினார். வெற்றிமாறனின்ன இந்ந கருத்துக்கு எதிராக பாஜகவினர் கொந்தளித்து வந்தனர். ஆனால் வெற்றிமாறனுக்கு ஆதரவாக நாம் தமிழர், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கமல்ஹாசன் ராஜராஜன் காலத்தில் இந்த என்ற மதமே இல்லை, அப்போது சைவமும் வைணவமும்தான் இருந்தது எனக் கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள்: பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி.. left and Right எந்த செயலும் பள்ளியில் கிடையாது.. அமைச்சர் உறுதி
இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல் சந்தோஷ், ராஜராஜன் குறித்து பேசியுள்ளார். ராஜ ராஜன் காலத்தில் இந்து மதம் இல்லை என்று கூறுகிறார்கள், ராஜராஜன் காலத்தில் தமிழ்நாடு என்ற ஒன்றே கிடையாது.
சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு என்றுதான் இருந்தது. ராஜராஜன் ஆண்டபோது தமிழ்நாடு என்ற ஒன்று இல்லாத போது அவர் எப்படி திராவிட மன்னனாக இருந்திருக்க முடியும், அவர் இந்து மன்னர் இல்லை என்றால் எப்படி அவ்வளவு பெரிய பிரகதீஸ்வரர் கோவிலை கட்டி இருக்க முடியும். ராஜராஜன் இந்துவா இல்லையா என்ற விவாதத்தை முட்டாள்கள் முன்னெடுக்கிறார்கள், ஊழலும் பாரபட்சமும் சேர்ந்ததுதான் திராவிடம். இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.