Asianet News TamilAsianet News Tamil

ஒருநாள் மாசுபட்டால் தப்பு இல்ல.. இந்த தீபாவளிக்கு நிறைய பட்டாசு வெடியுங்கள்... ரெம்ப அசால்டா பேசிய அண்ணாமலை.

ஒரு நாள் ஏற்படும் மாசுபாட்டால் ஒன்றும் ஆகிவிடாது என்றும்,  எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிக பட்டாசுகளை வாங்கி வெடியுங்கள் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

There is nothing wrong if you get polluted one day.. Burst a lot of firecrackers this Diwali... Annamalai spoke.
Author
First Published Oct 22, 2022, 3:20 PM IST

ஒரு நாள் ஏற்படும் மாசுபாட்டால் ஒன்றும் ஆகிவிடாது என்றும்,  எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிக பட்டாசுகளை வாங்கி வெடியுங்கள் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக உள்ள தமிழகம் ஏன் பொருளாதாரத்தில் தடுமாறுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  இப்போதே தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ஆனாலும் பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு உத்தர வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை  சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை  இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு வெடியுங்கள் என கூறியுள்ளார். அச்செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறிய விவரம் பின்வருமாறு:-

There is nothing wrong if you get polluted one day.. Burst a lot of firecrackers this Diwali... Annamalai spoke.

இதையும் படியுங்கள்: மரத்தில் துணியை சுற்றி வைத்தால் கூட அண்ணார்ந்து பார்ப்பவர் ஜெயக்குமார்.. பங்கமாய் கலாய்த்த கோவை செல்வராஜ்..!

திமுக அரசு நமது தாய்மொழியான தமிழுக்கு துரோகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 52000 மாணவர்கள் தோல்வி அடைந்தனர், தமிழ் வழி  பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது, பல பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசு தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்திருக்கிறது? திமுக அனைத்தையும் குருட்டுத்தனமாக  எதிர்த்து வருகிறது,  தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி முதலாண்டில் தமிழ் பாடத்தில் பாடத்திட்டத்தினை வைக்க முடியுமா என்பதை திமுக சொல்ல வேண்டும்.  திமுக தமிழுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: இரண்டு அறிக்கைகள் குறித்து EPS வாயை திறந்து பேசமால் இருப்பது வேடிக்கையாக இருக்கு.. கொதிக்கும் கோவை செல்வராஜ்

வரும் 27 ஆம் தேதி பாஜக தலைமையில் நடைபெறுகிற போராட்டத்தில் திமுகவில் உள்ள நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகள் மற்றும் இந்தி கற்பிக்கப்படும் பள்ளிகள் குறித்து தெரிவிக்கப்படும். திமுகவின்  இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு நாடகம் என்று மக்களுக்கு நன்கு தெரியும். 1968இல் மூன்றாவது மொழியாக  இந்தி திணிப்பு கொண்டுவந்தது காங்கிரஸ் தான் என்பதை கே.எஸ் அழகிரியால் இல்லை என்று சொல்ல முடியுமா? இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் தமிழ் நாடு பொருளாதாரத்தில் தடுமாறுவது ஏன்?

There is nothing wrong if you get polluted one day.. Burst a lot of firecrackers this Diwali... Annamalai spoke.

சிஐஜி அளித்த தகவலின்படி தமிழகம் கடனில் உள்ளது அடுத்து வரும் நிதி ஆண்டில் கடன் பெற்று தான் ஆட்சி செய்யமுடியும், சிஐஜி அளித்திருக்கும் தகவல் தமிழகத்திற்கு அபாய மணி, இனியாவது அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றார்.  அப்போது தீபாவளி பண்டிகைக்கு விதிக்கப்பட்டு இருக்கிற கட்டுப்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒருநாள் மாசு ஏற்பட்டால் ஒன்றும் ஆகி விடாது, தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது என்பது நமது கலாச்சாரம், ஆகவே இந்த ஆண்டு நிறைய பட்டாசுகளை வாங்கி வெடியுங்கள் இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios