Asianet News TamilAsianet News Tamil

மதக்கலவரம் பண்ணனும்.. மசூதிகளை இடித்து தள்ளனும்... தமிழக பாஜக பிரமுகர் தொலைபேசி உரையாடல் வெளியானது.

உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை... இல்லை என்றால் துணிந்து மதக்கலவரம் செய்ய வேண்டும்... அப்படி இல்லை என்றால் அதிகாரத்திற்கு வரும் வரை அவர்களை உள்ளே வைத்து தான் அடிக்க வேண்டும், என மதக் கலவரத்திற்கு திட்டமிடும் தோரணையில் திருவாரூர் நகர பாஜக ஊடகப்பிரிவு தலைவர் செந்தில்குமார் லட்சுமணன் என்பவர் பேசியுள்ள தொலைபேசி உரையாடல் வெளியாகி பலரையும் அதிர்சியடைய வைத்துள்ளது.  

There is no use in getting emotional.. religious riots are the only way. bjp thiruvarur media wing president speech.
Author
First Published Sep 6, 2022, 1:08 PM IST

உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை... இல்லை என்றால் துணிந்து மதக்கலவரம் செய்ய வேண்டும்... அப்படி இல்லை என்றால் அதிகாரத்திற்கு வரும் வரை அவர்களை உள்ளே வைத்து தான் அடிக்க வேண்டும், என மதக் கலவரத்திற்கு திட்டமிடும் தோரணையில் திருவாரூர் நகர பாஜக ஊடகப்பிரிவு தலைவர் செந்தில்குமார் லட்சுமணன் என்பவர் பேசியுள்ள தொலைபேசி உரையாடல் வெளியாகி பலரையும் அதிர்சியடைய வைத்துள்ளது. இந்த ஆடியோவை கேட்கும் பலரும் இது எங்கே போய் முடியப் போகிறதோ என்று அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

வடமாநிலங்களில் பசுவின் பெயராலும், மாட்டிறைச்சியில் பெயராலும்  இஸ்லாமியர்கள் மற்றும் மசூதிகளின் மீது குழு தாக்குதல்கள் நடந்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. தற்போது அதே பாணியை தென்னிந்தியாவிலும் அரங்கேற்ற பாஜக மற்றும் சங் பரிவாரங்கள் திட்டமிட்டு வருவதாகவும் பல்வேறு அரசியல் கட்சிகள் எச்சரித்து வருகின்றன.

There is no use in getting emotional.. religious riots are the only way. bjp thiruvarur media wing president speech.

அதிலும், தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவராக இளம் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பாஜகவினரின் பேச்சுக்களும் செயல்களும் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவே விமர்சனங்கள் இருந்துவருகிறது.

சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பு பேச்சு பேசிவரும் பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் தொடங்கிய கிஷோர் கே.சாமி வரை பலரும் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதும் இதன் நீட்சியே என்று கூறப்படுகிறது, சமீபத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசிய வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த கனல் கண்ணன் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

இந்த கைதுகள் அனைத்துமே இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஓன்று. தமிழகத்தில் எப்படியாவது சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியது இந்துக்களின் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் முயற்சி என்றும், அதற்கான சதிவேலைகள்தான் தொடர்ந்து நடக்கிறது என்றும், விடுதலை சிறுத்துகள் கட்சிம் தலைவர் தொல்.திருமாவளவன் முதல் கம்யூனிஸட் கட்சிகளின் குற்றச்சாட்டாகவும் இருந்து வருகிறது. 

There is no use in getting emotional.. religious riots are the only way. bjp thiruvarur media wing president speech.

இந்நிலையில்தான் மத மோதல்களை தூண்டும் விதமாக திருவாரூர் நகர பாஜக ஊடகப்பிரிவு தலைவர் செந்தில்குமார் லட்சுமணன் பேசியுள்ள தொலைபேசி உரையாடல் ஒன்று  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அந்த ஆடியோவில், 

"அண்ணாமலையும் வக்கீலை அனுப்பி சப்போர்ட் செய்தாரு, ஆனால் நாம் மேடையில் உணர்ச்சிவசப் பட வேண்டிய அவசியம் இல்லை, இந்து முன்னணியினரை போல  நாம் பேசக்கூடாது, அரசியல் கட்சி என்றால் அரசியல் கட்சியை போல நடந்து கொள்ள வேண்டும்,  திமுகவுக்கும் நமக்கும் வேறுபாடு இருக்கிறது, அடிக்க வேண்டும் என்றால் அடிக்க வேண்டும். "சைலண்டாக அடிக்கவேண்டும் வயலன்ஸ்சாக அடிக்கக்கூடாது" 

 உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை காட்சி மேடையில் திட்டும்போது நம் தொண்டர்களே பின் வாங்கிவிடுவார்கள், அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு அவர்களை வளரவிடாமல் அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். 

அல்லது நமக்கு களம் சாதகமாக இருக்கிறது என்றால் மதக்கலவரம் பண்ணிவிட வேண்டும், எனவே நாம் இப்போதைக்கு மதத்தை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு அதிகாரத்திற்கு வரும் வரை அவர்களை உள்ளே வைத்து அடிக்க வேண்டும், இப்போது அவர்களை திட்டுவதால், அவர்கள் அடங்கிவிடப் போகிறார்களா? அடங்க மாட்டார்கள். 

There is no use in getting emotional.. religious riots are the only way. bjp thiruvarur media wing president speech.

ஒட்டுமொத்த பள்ளிவாசலும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருக்கிறது எனக்கூறி இடித்து தள்ள வேண்டும், அப்படி என்றால் அதற்கு நாம் அதிகாரத்திற்கு வரவேண்டும்.  அதைவிட்டு நாம் இப்போதே அவசரப்பட்டால் நடக்காது.. இவ்வாறு அந்த ஆடியோ அமைந்துள்ளது. 

மதக் கலவரத்திற்கு பாஜகவினர் திட்டமிடுகிறார்கள் என பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில்,  திருவாரூர் நகர பாஜக ஊடகப்பிரிவு தலைவர் சைலண்டாக அடிக்க வேண்டும் வையலண்னாக அடிக்க கூடாது, என  இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒட்டு மொத்த வன்மத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பேசியுள்ள இந்த தொலைபேசி உரையாடல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த பேச்சின் பின்னணியில் உள்ள சதி திட்டத்தை போலீசார் ஆராய வேண்டும், இதன் பின்னணியை தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios