விருதுநகர் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முழு சங்கியாகவே மாறிவிட்டார் என்று பேசியிருந்தார்.

அதிமுக அமைச்சர்கள் உதயக்குமார், பாண்டியராஜன், செல்லூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி போன்றவர்கள் திமுகவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை ஸ்டாலின் சங்கி என விமர்சனம் செய்திருந்தார்.அதற்கு தக்க பதிலடியாக நாங்கள்..

'கடவுள் பக்தியில் நாங்களும், பாஜகவும் ஒன்று' என்று ஸ்டாலினுக்கு திருப்பி பதிலடி கொடுத்தார் ராஜேந்திரபாலாஜி. 

இந்தநிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.மதுரையில் பேசிய அவர், ‘’அதிமுகவின் திட்டங்களில் எதிர்க்கட்சிகளால் குறை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அதிமுக அரசையும் அதிமுக அமைச்சர்களையும் வீணாக குறை கூறிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் சொல்கிற மாதிரி அதிமுகவில் எந்த அணியுமில்லை; பிணியுமில்லை’’என்று தெரிவித்திருக்கிறார்.