அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் கிடையாது; அவர்களாக போட்டுக் கொண்டுள்ளனர்; அதிமுகவை நல்லபடியாக கொண்டு செல்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது என சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. 

அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் கிடையாது; அவர்களாக போட்டுக் கொண்டுள்ளனர்; அதிமுகவை நல்லபடியாக கொண்டு செல்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது என சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. 

அதிமுக கலகம் ஏற்படுத்தி ஒரு குரூப்பை தன் பக்கம் கொண்டு வந்து, அதிமுகவை கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறார் சசிகலா. அதற்காக நலம் விசாரிப்பு என்ற பெயரில், சசிகலா, ‘’நல்லா இருக்கேன்... பத்திரமாக குடும்பத்தை பார்த்து கொள்ளுங்கள் என்று முதலில் பேச்சை ஆரம்பித்தார். இந்நிலையில், கட்சியை கைப்பற்றுவோம். என்னை யாரும் நீக்க முடியாது. அதிமுக எப்போதும் நம்முடையது தான். அதை எப்டியும் நான் என் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவேன் என்று ரேஞ்சில் சசிகலாவின் பேச்சில் மாடுலேஷன் மாறி இருக்கிறது.

இருந்தாலும், தொடக்கத்தில் இந்த உரையாடலுக்கு மவுசு இருந்த நிலையில், எத்தனை நாட்களுக்கு தான் இந்த உரையாடலை கேட்பது என அதிமுக தரப்பு மத்தியில் சசிகலாவின் உரையாடல் புளித்துப் போய் விட்டது. ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பது போல சசிகலாவின் உரையாடலுக்கு தென் மாவட்டங்களில் எதிர்பார்த்தபடி பெரிய வரவேற்பு ஒன்றும் இல்லை. அதுமட்டுமல்லாது சசிகலாவுடன் பேசிய பலரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

அவரது டெலிபோன் பேச்சுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத நிலையில், தற்போது சசிகலா பெயரை போட்டு ‘சசிகலா பேரவை’என்ற பெயரில் அமைப்பு தொடங்கியதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனால் கொந்தளித்துபோன சசிகலா ‘‘நான் அதிமுகவை முழுக்க என் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கிறேன். கட்சியில் உங்களுக்கு போஸ்டிங் தர நினைக்கிறேன். அதற்கு நாம் எல்லோரும் கவனமுடன் செயல்பட வேண்டும். நீங்க பேரவை பெயரில் போஸ்டர் ஒட்டினால், அந்த காரணத்தை காட்டியே அதிமுகவை பிடிக்க முடியாதபடி செய்து விடுவார்கள் போல. கட்சி நம்ம கைக்கு வரும்வரை பேரவை எல்லாம் வேண்டாம். அதை தூக்குங்கள் என்று ஆர்டர் போட்டுள்ளதாக அமமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. 


இந்நிலையில், ’’அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் கிடையாது; அவர்களாக போட்டுக் கொண்டுள்ளனர்; அதிமுகவை நல்லபடியாக கொண்டு செல்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது’’என சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. இது நேரடியாக எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் பேச்சாக அமைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.