“நான் ஓபிஎஸ் பக்கமும் இல்லை.. இபிஎஸ் பக்கமும் இல்லை..” ஒரே போடாக போட்ட ஜெயக்குமார்..!

யார் ஒற்றை தலைமை என எதுவும் கூறவில்லை.  நான் ஓபிஎஸ் பக்கமும் இல்லை, ஈபிஎஸ் பக்கமும் இல்லை. கட்சி தான் எனக்கு முக்கியம். அதிமுகவுக்கு அதிகபட்ச அதிகாரம் பொதுக்குழு தான்.பொதுக்குழு தான் அனைத்து அதிகாரமும் படைத்தது. அதில் தான் விதிகளை கொண்டு வரலாம்.

There is no intention to marginalize Panneerselvam.. Jayakumar

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை காலத்தின் கட்டாயம். ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. இதில், எந்தவிதமான உள்நோக்கமும் இதில் இல்லை. அதிமுக கூட்டத்தில் நடந்த விஷயத்தை நான் வெளிப்படையாக பேசியதாக சொல்கிறார்கள். நான் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை,கூட்டத்தில் நடந்த விவாதத்தை வெளிப்படையாக சொல்ல வில்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்று மட்டுமே சொன்னேன்.

There is no intention to marginalize Panneerselvam.. Jayakumar

யார் ஒற்றை தலைமை என எதுவும் கூறவில்லை.  நான் ஓபிஎஸ் பக்கமும் இல்லை, ஈபிஎஸ் பக்கமும் இல்லை. கட்சி தான் எனக்கு முக்கியம். அதிமுகவுக்கு அதிகபட்ச அதிகாரம் பொதுக்குழு தான்.பொதுக்குழு தான் அனைத்து அதிகாரமும் படைத்தது. அதில் தான் விதிகளை கொண்டு வரலாம். விதிகளை மாற்றலாம். ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழுவில் சுமூக முடிவு எட்டப்படும். நான் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் அண்ணன் இருவருமே எனது வீட்டிற்கு வந்தார்கள் அதே போன்று இரண்டு பேரும் டீ குடிக்க வந்தார்கள் என்றால் அங்கே பேசி முடித்துவிடலாம்.

There is no intention to marginalize Panneerselvam.. Jayakumar

அம்மாவோட மறைவுக்குப் பின்னால் எதிர்கட்சித் தலைவருக்கு போட்டிருந்தது அனைத்தும் சுபமாக முடிந்தது அல்லவா. அதே போன்று எதுவும் முடியும். ஓபிஎஸ் ஓரங்கட்டும் எண்ணம் கிடையாது. ஆடு நனையுதே என்று ஓநாய் அழுகிறது போல டிடிவி அங்கே அவர் பேசிக் கொண்டிருக்கிறார். சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என் மீது கொஞ்சம் பாசமாக இருப்பார்கள் அதை வைத்து அவர்கள் கோஷமிட்டனர் என ஜெயக்குமார் கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios